தமிழ்நாடு அரசு விருதுகள்
சுதந்திர தின விழா விருதுகள் 2024
கல்பனா சாவ்லா விருது ➨ தைரியம் மற்றும் துணிச்சல் முயற்சிக்கான விருது
- நீலகிரியைச் சேர்ந்த செவிலியர் ஏ. சபீனா அவர்களுக்கு கல்பனா சாவ்லா விருது வழங்கப்பட்டுள்ளது.
சாதனை:
- கேரளா வயநாடு மண்சரிவுக்குப் பின் 35க்கும் மேற்பட்ட உயிர்களைக்
காப்பாற்றினார்.
குறிப்பிடத்தக்க தைரியச் செயல்
- ஜூலை 30 அன்று வெள்ளப்பெருக்கில் சிக்கிய ஆற்றைக் கடக்க ஜிப்-லைன் மூலம் தன்னார்வமாக முன்வந்தார்.
- மழைக்கோட்டை அணிந்து முதலுதவிப் பெட்டியுடன் சென்றார். மீட்புக் குழு தயங்கியபோது தைரியம் காட்டினார்.
தகைசால் தமிழர் விருது
- தகைசால் தமிழர் விருது குமரி அனந்தன் அவர்களுக்கு வழங்கப்பட்டது. (மூத்த காங்கிரஸ் தலைவர்)
சாதனைகள்:
- 1978இல் நாடாளுமன்றத்தில் தமிழில் பேச அனுமதி பெற்றார்.
- தமிழ்நாட்டில் உள்ள மத்திய அரசு அலுவலகங்களில் தமிழுக்கு முன்னுரிமை கோருகிறார்.
குறிப்பிடத்தக்க தகவல்
- பாஜக தலைவரும் முன்னாள் தெலங்கானா ஆளுநருமான தமிழிசை செளந்தரராஜனின் தந்தை
டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் விருது
- டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் விருது பி. வீரமுத்துவேல் அவர்களுக்கு வழங்கப்பட்டது.(இஸ்ரோ விஞ்ஞானி)
பதவி:
சந்திரயான்-3 திட்டத்தின் இயக்குநர்
முதலமைச்சரின் சிறந்த நடைமுறைகளுக்கான விருது பெற்றவர்கள்
1. ஜே. இன்னோசென்ட் திவ்யா (ஐஏஎஸ்) ➨ நான் முதல்வன் திட்டம்
2. எஸ். திவ்யதர்ஷினி (ஐஏஎஸ்) ➨ முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம்
3. கே. இளம்பகவத் (ஐஏஎஸ்) ➨ சென்னை சர்வதேச புத்தக கண்காட்சி
4. என். கோபாலகிருஷ்ணன் ➨ இறந்தவர் உறுப்பு தான திட்டம்
5. டி.வனிதா ➨ கலைஞர் மகளிர் உரிமைத் தொகைத் திட்டம்
மாற்றுத்திறனாளிகளுக்கான சேவைக்கான விருதுகள்
சிறந்த மருத்துவர்: ஜே. விஜயலட்சுமி
சிறந்த நிறுவனம்: வித்யா சாகர்
சிறந்த சமூக சேவகர்: எம். சூசை அந்தோணி
சிறந்த தனியார் நிறுவனம்: எம்/எஸ். சந்தானம் பேக்கேஜிங் பிரைவேட் லிமிடெட்
சிறந்த மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி: காஞ்சிபுரம் மத்திய கூட்டுறவு வங்கி
பெண்கள் நலனுக்கான விருதுகள்
சிறந்த நிறுவனம்: ஐஸ்வர்யம் அறக்கட்டளை, மதுரை
சிறந்த சமூக சேவகர்: மீனா சுப்ரமணியன்
சிறந்த செயல்பாட்டிற்கான முதலமைச்சரின் விருது ➨ உள்ளாட்சி அமைப்புகள்
மாநகராட்சிகள்: கோயம்புத்தூர் (முதலிடம்)
நகராட்சிகள்: திருவாரூர் (முதலிடம்)
பேரூராட்சிகள்: சூலூர், கோயம்புத்தூர் மாவட்டம் (முதலிடம்)
பெருநகர சென்னை மாநகராட்சி: 14வது மண்டலம் (முதலிடம்)
முதலமைச்சரின் மாநில இளைஞர் விருது பெற்றவர்கள்
1. என். கதிரவன் (ஈரோடு மாவட்டம்)
2. ஜோஷன் ரெகோபெர்ட் (கன்னியாகுமரி)
3. சி. ஜெயராஜ் (கடலூர்)
4. எஸ். நிகிதா (கடலூர்)
5.கவின் பாரதி (புதுக்கோட்டை)
6.எஸ்.உமாதேவி (விருதுநகர்)
7. கே.ஆயிஷா பர்வீன் (இராமநாதபுரம்)
இதையும் படிக்கலாமே
தேர்தல் பத்திரங்கள் கடந்துவந்த பாதை |