ரக்ஷா பந்தன் வரலாறு உங்களுக்குத் தெரியுமா ? | Raksha Bandhan History in Tamil

THITTAM AUTHOR

By THITTAM

Published on:

Join Telegram Channel Join WhatsApp Channel Join Facebook Page
ரக்ஷா பந்தன் வரலாறு உங்களுக்குத் தெரியுமா Raksha Bandhan History in Tamil

ரக்ஷா பந்தன் வரலாறு உங்களுக்குத் தெரியுமா ? | Raksha Bandhan History in Tamil

வணக்கம் நண்பர்களே, இன்றைய பதிவில் நாம் காண இருப்பது ஜாதி, மதம், இனம், மொழி கடந்த ரக்ஷா பந்தனின் உண்மையான வரலாற்று கதை பற்றியதுதான்.

“ரக்ஷா” என்றால் ‘பாதுகாப்பு’ என்றும் “பந்தன்” என்றால் ‘ரத்த பந்தம்’ என்றும் பொருள்படும். ரக்ஷா பந்தன் தினத்தில் உடன் பிறந்தவர்களுக்கு மட்டுமல்லாமல் மனதுக்கு பிடித்து சகோதரர்களாக நினைப்பவர்களின் கையிலும் கட்டுவது தான் இந்த “ராக்கி பண்டிகை” அதாவது ரக்ஷா பந்தன்.

இந்தியாவின் கலாச்சாரத்தை எடுத்துரைக்கும் விதமாக பல பண்டிகைகள் நமது நாட்டில் கொண்டாடப்பட்டாலும், சகோதர சகோதரி அன்பையும் மற்றும் பாசத்தையும் வெளிப்படுத்தும் விதமாக இந்த ரக்ஷா பந்தன் தினமானது கொண்டாடப்படுகிறது.

ரக்ஷா பந்தன் தினமானது சகோதர சகோதரிகளுக்கு இடையேயான அன்பையும் மற்றும் பாசத்தையும் வெளிப்படுத்தும் ஒரு அற்புத திருநாளாக விளங்குகிறது. இந்த ரக்ஷா பந்தன் தினமானது ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாதம் பௌர்ணமி அன்று கொண்டாடப்படுகிறது.

ரக்ஷா பந்தன் வட இந்தியாவில் பிரபலமாக கொண்டாடப்படும் ஒரு நிகழ்ச்சியாகும். தற்போது தென்னிந்தியாவிலும் ரக்ஷா பந்தன் நிகழ்ச்சி பிரபலமாகி வருகிறது.

ரக்ஷா பந்தன் எப்படி கொண்டாடப்பட வேண்டும் ?

ரக்ஷா பந்தன் வரலாறு உங்களுக்குத் தெரியுமா Raksha Bandhan History in Tamil

 

ரக்ஷா பந்தன் தினத்தில் பெண்கள் புதிய ஆடைகள் அணிந்து, தமது சகோதரர்களின் மணிக்கட்டில் ராக்கி கட்டும் வரை எதுவும் சாப்பிடாமல் இருப்பார்கள். சகோதரர்கள் நெற்றியில் சிவப்பு குங்குமம் இட்டு, அவர்களுக்கு இனிப்பு வழங்கிய பின்பு மணிக்கட்டில் ராக்கி என்னும் புனித கயிற்றை கட்டுவார்கள்.

ராக்கி என்னும் ஒரு மஞ்சள் நூல் கட்டுவது இந்தப் பண்டிகையின் சிறப்பாகும்.

ரக்ஷா பந்தன் தினத்தில் ராக்கி கட்டியவுடன் சகோதரன், அந்த அன்பு சகோதரிக்கு ஏதாவது ஒரு பரிசு அல்லது பணம் அளிப்பது வழக்கம். ரக்ஷா பந்தன் தினத்தை யாரும் ஒரு மதம் சார்ந்த பண்டிகையாக மட்டும் பார்க்காமல் அதை சமுதாயம் சார்ந்த பண்டியாக கொண்டாடப்படுவது அவசியமாகும்.

பழங்காலத்தில் சுத்தமான மஞ்சள் கொண்டு, பட்டு நூல்களை பயன்படுத்தி ராக்கிகளை கட்ட தொடங்கினர். தற்போது காலத்திற்கு தகுந்தார் போல் தங்கம், வெள்ளி மற்றும் பட்டு நூல் இலைகள் என புதுப்புது வடிவங்களில் ராக்கிகள் தயார் செய்யப்பட்டு விற்பனையாகிறது.

ரக்ஷா பந்தன் சிறப்பு

இந்த ரக்ஷா பந்தன் தினத்தில் ஒரு பெண் தன்னுடைய சகோதரன் அல்லது சகோதரனாக கருதக்கூடிய நபருக்கு ராக்கி என்னும் புனித நூல் அதாவது ராக்கி கயிறு கட்டுவார்கள். இதை ஏற்றுக்கொண்ட சகோதரன், அந்த சகோதரியின் வாழ்க்கையில் எப்போதும் பாதுகாப்பாகவும் எந்த ஒரு சூழ்நிலையிலும் உறுதுணையாக இருப்பேன் எனவும் உறுதி கூறுவதாக இந்த ராக்கி கட்டும் நிகழ்வு குறிப்பிடப்படுகிறது.

தற்போது ரக்ஷா பந்தன் தினத்தை வெகு சிறப்பாக உலகம் முழுவதும் கொண்டாடி வருகிறார்கள்.

நண்பர்களே, ரக்ஷா பந்தன் தினத்தில் ராக்கி கட்டுவதன் சிறப்பை பற்றி இப்பொழுது நீங்கள் தெரிந்திருப்பீர்கள். அடுத்ததாக நாம் காண இருப்பது ரக்ஷா பந்தன் தோன்றிய வரலாற்றை பற்றியதுதான். இந்த ரக்ஷா பந்தன் ஆனது புராண காலத்திலிருந்து தற்காலம் வரைக்கும் எப்படி வளர்ந்து வந்தது என்பதைப் பற்றி பார்ப்போம் வாருங்கள்.

ரக்சா பந்தன் வரலாறு | Raksha Bandhan History in Tamil

ரக்ஷா பந்தன் கொண்டாடப்படுவதற்கான வரலாற்று காரணங்கள்

மகாபாரதத்தில் தொடங்கிய ரக்ஷா பந்தன்

கிருஷ்ணர் – திரௌபதி அவர்களின் சகோதர உணர்வு | Krishna Draupadi Brotherhood Story

போர்க்களத்தில் கிருஷ்ணருக்கு மணிக்கட்டில் ஏற்பட்ட காயத்தைப் பார்த்த பாண்டவர்களின் மனைவியான தேவி திரௌபதி அவர்கள் தன் புடவையின் ஒரு பகுதியை கிழித்து, அதை கிருஷ்ணரின் மணிக்கட்டில் கட்டினார். இந்த நிகழ்வு கிருஷ்ணரின் ஆழ்மனதை தொட்டதால் அவர் திரௌபதியை தனது சகோதரியாக ஏற்றுக்கொண்டு அவரை எல்லா தீய சக்திகளிடமிருந்தும் மற்றும் பிரச்சனைகளிலிருந்தும் பாதுகாப்பதாக தேவி திரௌபதிக்கு உறுதியளித்தார்.

raksha bandhan history in tamil ரக்சா பந்தன் வரலாறு

பாண்டவர்கள் சூதாட்டத்தில் தோற்று, திருதராஷ்டிரனின் அவையில் திரௌபதியின் துகிலுரிய முயன்ற போது, கிருஷ்ணர் அந்த சமயத்தில் திரௌபதிக்கு அளித்த உறுதி மொழியை காப்பாற்றும் விதமாக கிருஷ்ணர் நீண்ட புடவை அருளி தேவி திரௌபதியின் மானத்தை காத்தார்.

கிருஷ்ணரின் கையில் திரௌபதி புடவையின் ஒரு பகுதியை கிழித்து கட்டிய நிகழ்வை குறிக்கும் விதமாக இந்த ரக்ஷா பந்தன் விழா ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்பட்டு வருகிறது.

மதங்களையும் தாண்டிய மனிதநேயம் – ரக்ஷா பந்தன்

ராணி கர்ணாவதி – ஹுமாயூன் அவர்களின் சகோதர உணர்வு | Humayun and Karnavati Story

ரக்ஷா பந்தன் வரலாறு raksha bandhan story in tamil

ரக்ஷா பந்தன் கொண்டாடப்படுவதற்கான மற்றொரு வரலாற்று நிகழ்வும் உள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள சித்தூர் நாட்டை ராணி கர்ணாவதி ஆட்சி புரிந்து வந்தார். குஜராத்தை ஆட்சி செய்த சுல்தான் பகதூர் ஷா அவர்கள் சித்தூர் நாட்டை கைப்பற்ற அந்த நாட்டின் மீது போர் தொடுத்தார். இதை அறிந்த ராணி கர்ணாவதி முகலாய பேரரசான ஹுமாயூன் அவர்களுக்கு ‘ராக்கி’ என்னும் புனித கயிற்றை அனுப்பினார். தனக்கு உதவுமாறு ராணி கர்ணாவதி கேட்டுக்கொண்டார். பாச உணர்வு கொண்ட ஹுமாயூன் அவர்கள் ராணி கர்ணாவதியையும் அவரது ராஜ்ஜியத்தையும் காப்பாற்ற முற்பட்டார். ஆனால் அதற்குள் ராணியை வென்று, பகதூர் ஷா சித்தூரில் வெற்றி கொடியை நாட்டினார்.

அலெக்சாண்டர் மனைவி – போரஸ் மன்னர் அவர்களின் சகோதர உணர்வு | Rakhi Story of wife of Alexander and Porus

raksha bandhan history in tamil

கி.மு 326 இல் மாவீரர் அலெக்சாண்டர் அவர்கள் இந்தியா மீது படையெடுத்தார். அவர் ஏறக்குறைய வட இந்தியா முழுவதையும் கைப்பற்றி விட்டார். பின்னர் போரஸ் மன்னரிடம் போரிடச் சென்றார். போரஸ் மன்னரின் வலிமையை கேள்விப்பட்ட அலெக்சாண்டரின் மனைவி ரோஷனா அவர்கள் போரில் தன் கணவரின் உயிருக்கு எந்த ஒரு தீங்கினையும் ஏற்படுத்தக் கூடாது என்று அவருக்கு ஒரு புனித நூலை அனுப்பினார்.

பாசத்தால் உருகிய மன்னர் போரஸ் ரோஷனாவை தனது சகோதரியாக ஏற்றுக் கொண்டார். போரில் அலெக்சாண்டரை கொல்ல நேரடியாக வாய்ப்பு கிடைத்தும் மன்னர் போரஸ் அவர்கள் தனது கையில் கட்டியிருந்த புனித நூலை பார்த்ததும் அவரை உயிருடன் விட்டுவிட்டு சென்றார்.

இப்படி ரக்ஷா பந்தன் விழா கொண்டாடப்படுவதற்கான பல வரலாற்று காரணங்கள் மற்றும் கதைகள் நிறைய உள்ளது. அனைவரும் ஒற்றுமை உணர்வுடன் ரக்ஷா பந்தன் விழாவை கொண்டாடுவோம்.

திட்டம் வலைத்தளம் சார்பாக அனைவருக்கும் இனிய ரக்ஷா பந்தன் நல்வாழ்த்துக்கள்.

இதையும் படிக்கலாமே,

Happy Raksha Bandhan Wishes in Tamil | ரக்ஷா பந்தன் வாழ்த்துக்கள் 2024
THITTAM AUTHOR

THITTAM

Leave a Comment

error: Content is protected !!