Vinayagar Chaturthi Wishes in Tamil 2024 | விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள் கவிதை

THITTAM AUTHOR

By THITTAM

Published on:

Join Telegram Channel Join WhatsApp Channel Join Facebook Page
விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள் கவிதை
  1. Vinayagar Chaturthi Wishes in Tamil 2024 | விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள் கவிதை

விநாயகர் சதுர்த்தி

விநாயகர் சதுர்த்தி என்பது ஐங்கரன், சக்தி மைந்தன், சங்கரன் புதல்வன், சரவணன் தமயன் கணேசன் அதாவது விநாயகர் அவதரித்த தினமே விநாயகர் சதுர்த்தி ஆகும்.

விநாயகர் சதுர்த்தி 2024 தேதி

விநாயகர் சதுர்த்தி இந்த ஆண்டு செப்டம்பர் 7, 2024 சனிக்கிழமை வருகிறது.

விநாயகர் சதுர்த்தி வரலாறு

Vinayagar Chaturthi Vazhthukkal in Tamil
Vinayagar Chaturthi Vazhthukkal in Tamil

இந்து மதத்தில் பல பண்டிகைகள், திருவிழாக்கள் இறைவனுக்காக கொண்டாடப்படுகின்றன அதில் முக்கியமான ஒன்று “விநாயகர் சதுர்த்தி” (ஆங்கில மாதத்தில் செப்டம்பர்) ஆவணி மாதத்தில் வளர்பிறை சதுர்த்தி திதி நன்னாளில் சிவனின் மைந்தனும் பார்வதியின் புதல்வனுமாக அவதரித்தார் விநாயகப் பெருமான். இந்த நாளே விநாயகர் சதுர்த்தி.

நாம் இவ்வளவு சிறப்பாக கொண்டாடும் இந்த விநாயகர் சதுர்த்தி விழாவை மகாராஷ்டிரத்தில் மராட்டிய மன்னராக இருந்த சத்ரபதி சிவாஜி விநாயகர் சதுர்த்தியை நடைமுறைப்படுத்தினார்.

Vinayagar Chaturthi Quotes in Tamil
Vinayagar Chaturthi Quotes in Tamil

அந்த மாநிலத்தில் இருக்கும் அனைத்து மக்களும் தங்கள் வசதிக்கு ஏற்ப விநாயகர் சிலையினை களிமண்ணால் செய்து வணங்கி வந்தனர்.

1893 ல் பாலகங்காதர திலகர் இந்து மதத்தின் மீது கொண்ட பற்றினால் விநாயகர் சிலையினை மக்களுக்கு ஊர்வலமாக கொண்டு வந்து இந்த விநாயகர் சதுர்த்தி விழாவினை ஊக்குவித்தார்.

தற்பொழுது இந்தியா முழுவதும் இந்த விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. (3,5,7,11..) ஒற்றைப்படை நாளில் அருகில் இருக்கும் ஆற்றிலோ குளங்களிலோ நீர் நிலைகளிலோ கரைத்தனர்.

களிமண்ணால் செய்யப்பட்ட விநாயகர் சிலையினை ஆற்றில் கரைத்தனர். அவ்வாறு விநாயகர் சிலையை ஆற்றிலோ குளங்களிலோ கரைக்கும் பொழுது ஆடி மாதத்தில் மணல் வளம் ஆற்றில் அடித்து செல்வதனால் களிமண் தண்ணீரை உரியும் இயல்பினையுடையதால் அந்த களிமண்ணால் செய்யப்பட்ட விநாயகரை ஆற்றில் கரைப்பதனால் தண்ணீரை தக்க வைப்பதற்கும்,கோடை காலத்தில் ஏற்படும் நீர் பஞ்சத்தை தவிர்ப்பதற்கும் ஆடிக்கு அடுத்த மாதத்தில் ஆவணியில் இந்த விழாவை கொண்டாடுகின்றனர்.

Ganesh Chaturthi Wishes in Tamil
Ganesh Chaturthi Wishes in Tamil

ஆனை முகனை பானை வயிற்றோனை பானைகள், பொம்மைகள் செய்யும் களிமண்ணால் உருவாக்கினர்.

  • களிமண்ணின் இயல்பு ஈரத்தை உரியும் தன்மையுடனும் எந்த உருவத்தையும் எளிதில் உருவாக்க பயன்படும்.

“ செய்யும் தொழிலே தெய்வம்”

விவசாயம் செய்யும் தொழிலே முதன்மை தொழிலாக பழங்காலத்தில் இருந்து இன்று வரை உள்ளது.

விவசாயத்திற்கு களிமண் ஆற்று நீர் முக்கியமானவை.

அந்தக் களிமண்ணை கொண்டு இயற்கைக்கு எந்த தீங்கும் விளைவிக்காத வகையில் விநாயகர் சிலையை உருவாக்கி வழிபட்டனர்.

தற்போது நவீன முறையில் பல வண்ணங்களை பயன்படுத்தி விநாயகர் சிலைகளை அழகு படுத்துகின்றனர். இது இயற்கை வளங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது.

Vinayagar Chaturthi Wishes in Tamil 2024 | விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள் கவிதை
விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள் கவிதை
விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள் கவிதை

கணங்களின் நாயகனாக

கலியுகத்தைக் காக்க வந்த கண் கண்ட தெய்வமே!! கணபதியே!! வருக வருக

இனிய விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்!!

Happy Vinayaka Chaturthi Wishes in Tamil
Happy Vinayaka Chaturthi Wishes in Tamil

தும்பிக்கையானை நம்பிக்கையுடன் வழிபட்டால்
வாழ்வில் வெற்றி நிச்சயம்

இனிய விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்!!

மோதக பிரியனே மூஞ்சூர் வாகனனே
முக்கண்ணனின் மூத்தவனே
மலைமகளின் மைந்தனே
முன்னை முதல் கடவுளே
முழு மனதுடன் மண்டியிட்டு வணங்குகிறேன்

இனிய விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்!!

Vinayagar Chaturthi Wishes in Tamil 2024

ஞானப் பழத்தைப் பெற
அம்மை அப்பனே
ஞாலம் என சுற்றி வெற்றி பெற்ற
ஆனைமுகன் அவதரித்த நன்னாளை கொண்டாடுவோம்.

இனிய விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்!!

Vinayagar Chaturthi Vazhthukkal in Tamil | விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்
vinayagar chaturthi invitation in tamil
Vinayagar Chaturthi Invitation in Tamil

அரச மர நிழலிலும் ஆற்றங்கரை ஓரத்திலும்

அமர்ந்திருந்து அருள் புரியும்

ஆவணி மாதத்தில்
அவதரித்த ஆண்டவனே

ஆனைமுகப்பெருமானே போற்றி போற்றி

இனிய விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்!!

Happy Vinayagar Chaturthi Wishes in Tamil
Happy Vinayagar Chaturthi Wishes in Tamil

அருகம்புல் மாலை சாற்றி
மோதகம் சுண்டலும் அமுது படைத்து
அகம் மகிழ உன்னை அனுதினமும் வணங்குவோம் விநாயகப் பெருமானே..

இனிய விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்!!

பக்தியால் உனை நாளும் சுற்றி வந்தேன்
உனது சக்தியினால் எனக்கு சித்தியும் புத்தியும் வழங்கிய
சித்தி விநாயகனே சக்தி மைந்தா
உனை நாளும் வணங்குவேன்

இனிய விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்!!

சங்கடங்களை தீர்க்கும் சங்கரன் புதல்வனை சதுர்த்தி அன்று வணங்கினால்

பல நலங்களும் வளங்களும் பெருகும்

அனைவருக்கும் இனிய விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்!!

Vinayagar Chaturthi Quotes in Tamil | விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள் கவிதை

இனிய விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்

மஞ்சளிலும் வடிவெடுத்தாய் களிமண்ணிலும் உருவெடுத்தாய்
மண்ணுலகத்தைக் காக்க அவதரித்தாய்

உன்னை நாளும் வணங்கிடுவேன் விநாயகப் பெருமானே

இனிய விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்

மக்களை காக்கும் அரசாளும் மன்னர்களுக்கும்
அவர்களை அச்சுறுத்தும் அசுரர்களுக்கு
அறிவினை புகட்டும்
அரச மரத்து விநாயகரே போற்றி போற்றி

இனிய விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்

காகமாக உருவெடுத்து அகஸ்தியரின் கமண்டலத்தை தட்டிவிட்டு

காவிரியை உருவாக்கிய
சிறு குழந்தையாய் மாறிய பிள்ளையாரை வணங்குவோம்

இனிய‌ விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்

அரச மரத்து விநாயகனே ஆற்றங்கரையில் அமர்ந்தவனே

அருகம்புல் நாயகனே ஆனைமுகப்பெருமானே

இனிய விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்

இன்பம் பொங்க இல்லம் செழிக்க
உள்ளம் மகிழ
விநாயகரை வணங்குவோம்.

அனைவருக்கும் இனிய விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்

Happy Vinayagar Chaturthi Wishes in Tamil

தொடங்கிய செயல் அனைத்தும் வெற்றி பெற வெற்றி விநாயகரை வணங்குவோம் !!!

அனைவருக்கும்

இனிய விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்

ஐந்து பூதங்களை மையமாகக் கொண்டு
ஐந்து கரங்களை உடைய
விநாயகனை
ஐம்புலன்களையும் அடக்கி
வணங்குவோம்

அனைவருக்கும்

இனிய விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்

சாலையில் ஏற்படும் சங்கடங்களை தீர்க்க சாலையோரம் அமைந்திருக்கும்
சாலை விநாயகரை வணங்குவோம்.

அனைவருக்கும்

இனிய விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்

காரியங்கள் அனைத்தும் சித்தி பெற சித்தி விநாயகரை வணங்குவோம்

அனைத்து சக்திகளையும் பெற சக்தி விநாயகரை வணங்குவோம்

அனைவருக்கும்

இனிய விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்

Ganesh Chaturthi Wishes in Tamil

காரியங்கள் அனைத்தும் சித்தி பெற வாழ்வில் வெற்றி பெற

பிள்ளையார்பட்டி பிள்ளையாரை வணங்குவோம்

இனிய விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்

மனமெங்கும் இன்பம் பொங்க மணகோலம் பெற

மணக்குள விநாயகரை வணங்குவோம்.

அனைவருக்கும்

இனிய விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்

Vinayagar Chaturthi Wishes in Tamil 2024 விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள் கவிதை

அரசாளும் யோகமும் அரசு வேலையும் பெற

அரச மரத்து விநாயகரை வணங்குவோம்.

அனைவருக்கும்

இனிய விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்

நாக தோஷங்கள் நீங்க ராகு கேது தோஷங்கள் நீங்க
சர்ப்ப விநாயகரை வணங்குவோம்

இனிய விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்

Happy Vinayaka Chaturthi Wishes in Tamil
இன்பங்கள் பெருகட்டும்
செல்வங்கள் சேரட்டும்
மனதில் மகிழ்ச்சி மலரட்டும்
அனைத்து நல் உள்ளங்களுக்கும் எனது
இனிய விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்!!

இந்தப் பொன்னாளில் விநாயகப் பெருமானை வணங்கும்

அனைவருக்கும்

எல்லா காரியத்திலும் வெற்றிகள் குவியட்டும்!!

இனிய விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்!!

பொறுத்தார் பூமி ஆள்வதை போல் பொறுமையை கடைபிடித்து

பெருமையைப் பெற்று பெருமகிழ்ச்சியுடன்
வாழ்வோம்

இனிய விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்!!

இதையும் படிக்கலாமே,

கிருஷ்ண ஜெயந்தி வரலாறு, விரதம் முறைகள், வழிபாடு மற்றும் வாழ்த்து கவிதைகள்
THITTAM AUTHOR

THITTAM

Leave a Comment

error: Content is protected !!