கிருஷ்ண ஜெயந்தி வரலாறு, விரதம் முறைகள், வழிபாடு மற்றும் வாழ்த்து கவிதைகள்
பகவான் ஸ்ரீ கிருஷ்ணன் பிறந்த வரலாறு
பகவான் ஸ்ரீ மகாவிஷ்ணுவின் ஒரு அவதாரம் தான் கிருஷ்ணர் அவதாரம். மதுரா நகரில் தேவகி – வாசுதேவருக்கு எட்டாவது மகனாக பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் அவதரித்தார்.
கிருஷ்ணனின் மாமா கம்சன் மகாராஜா தனது தங்கை தேவகியை சிறைச்சாலையில் அடைத்து வைத்திருந்தார். தனது தங்கைக்கு பிறக்கும் குழந்தையால் தன் உயிருக்கு ஆபத்து என்று கருதி தங்கை தேவகி மற்றும் அவரது கணவர் வாசுதேவரையும் சிறைச்சாலையில் அடைத்தார்.
கிருஷ்ணர் சிறைச்சாலையில் பிறந்தார். சிறைச்சாலையில் பிறந்த கிருஷ்ண பகவான் கோகுலத்தில் வளர்ப்புத் தாய் யசோதையால் வளர்க்கப்பட்டார்.
ஸ்ரீ கிருஷ்ணருக்கு கண்ணா மற்றும் முகுந்தா என்று பெயர்கள் வர காரணம்
கிருஷ்ணர் தனக்காக மட்டும் இல்லாமல் பிறருக்காகவும் வாழ்ந்தவர்.
கிருஷ்ணரை கண்ணா என்று அழைப்பதன் காரணம் கண்ணைப்போல் காப்பவன் என்பது பொருள்.
கிருஷ்ணரை முகுந்தா என்று அழைப்பதன் காரணம், அதாவது முகுந்தா என்றால் வாழ்வதற்கு இடம் அளித்து முக்தி அளிப்பவன் என்று பொருள்.
கிருஷ்ண ஜெயந்தி வரலாறு
பகவான் ஸ்ரீ மகாவிஷ்ணுவின் ஒரு அவதாரம் தான் கிருஷ்ணர் அவதாரம்
கிருஷ்ணர் பிறந்த தினத்தை தான் நாம் ‘கிருஷ்ண ஜெயந்தி’ என்று கொண்டாடுகிறோம்.
ஸ்ரீ கிருஷ்ண பகவான் அவதரித்த தினத்தை கிருஷ்ண ஜெயந்தி, கோகுலாஷ்டமி, ஜென்மாஷ்டமி என பல பெயர்களில் நாம் குறிப்பிடுகிறோம்.
ஸ்ரீ கிருஷ்ண பகவான் சிறுவயதிலிருந்தே கோகுலத்தில் வாழ்ந்ததால் கோகுலாஷ்டமி என்று சொல்வார்கள்.
கிருஷ்ண ஜெயந்தி விழா பற்றிய குறிப்புகள்
கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடப்படும் நாள்: கிருஷ்ண ஜெயந்தி 2024 இந்த 2024 ஆம் ஆண்டில் 26 ஆம் தேதி திங்கட்கிழமை கிருஷ்ண ஜெயந்தி வருகிறது. கிருஷ்ண ஜெயந்தி ➨ 26.08.2024 திதி: அஷ்டமி திதி |
கிருஷ்ண ஜெயந்தி வழிபாடு
- கிருஷ்ண ஜெயந்தி வழிபாடு செய்வதற்கு உகந்த நேரம் மாலை நேரம்
- கிருஷ்ண பகவானுக்கு விரதம் இருப்பவர்கள் 26.08.2024 திங்கள் கிழமை நள்ளிரவில் தங்களது விரதத்தை முடித்துக் கொள்ளலாம்.
- கிருஷ்ண ஜெயந்தி வழிபாடு மாலை நேரத்தில் செய்வதற்கு காரணம் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் நள்ளிரவில் தான் அவதரித்தார் என்று கூறப்படுகிறது.
வீட்டில் கிருஷ்ண ஜெயந்தி பூஜை செய்வது எப்படி?
கிருஷ்ண ஜெயந்தி பூஜை நேரம்
மாலை 6.00 மணி முதல் 7:00 மணிக்குள் கிருஷ்ண ஜெயந்தி பூஜை செய்தால் கிருஷ்ண ஜெயந்தி தினத்தில் விரதம் இருப்பவர்களின் வீட்டிற்குள் கிருஷ்ண பகவான் வந்து அருள் புரிவார் என்பது ஐதீகம்.
கிருஷ்ணரின் துதிகள், மந்திரங்களை உச்சரித்து கிருஷ்ணரின் மேல் பூக்களை தூவி வழிபடுவது மிகவும் நல்லது.
கிருஷ்ண ஜெயந்தி தினத்தில் தீப வழிபாடும் செல்வமும்
- பண வரவு அதிகரிக்க, செல்வம் பெருக கிருஷ்ண ஜெயந்தி தினத்தில் இந்த தீபத்தை ஏற்றுங்கள்.
தீபத்திற்கு தேவையான பொருட்கள்:
- அரசமரம் அல்லது ஆலமரம் இலை ஒன்று
- மண் விளக்கு ஒன்று
- பஞ்சு திரி ஒன்று
- பூக்கள், நெய், மஞ்சள், குங்குமம் தேவையான அளவு
தீபம் ஏற்றும் முறை
- முதலில் அரச மரம் அல்லது ஆலமர இலை ஒன்றை எடுத்துக் கொள்ளுங்கள். அதை நன்கு சுத்தம் செய்து கொள்ளுங்கள். பின்பு அந்த இலையில் மஞ்சள் குங்குமம் போட்டு வைத்துக் கொள்ளுங்கள்.
- அடுத்ததாக மண் விளக்கை எடுத்துக் கொள்ளுங்கள். அதற்கும் மஞ்சள் குங்குமம் போட்டு வைத்துக் கொள்ளுங்கள். பிறகு அதில் தேவையான அளவிற்கு நெய் ஊற்றி பஞ்சு திரியிட்டு விளக்கை ஏற்றுங்கள்.
- பின்னர் அந்த விளக்கினைச் சுற்றி நீங்கள் எடுத்துக் கொண்ட பூக்களினால் அலங்காரம் செய்து கொள்ளுங்கள்.
- கிருஷ்ண ஜெயந்தி பூஜையில் இந்த தீபத்தை ஏற்றி வைத்த பின்பு பூஜை செய்வது மிக மிக நல்ல பலனை அளிக்கும்.
கிருஷ்ண பகவானின் பாதம்
பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் நடு இரவில் அவதரித்தார். கிருஷ்ண பகவானை வரவேற்பதற்காக வாசலில் இருந்து பூஜை அறை வரை அரிசி மாவினால் பாதங்கள் வரைந்து கிருஷ்ணரை வரவேற்க வேண்டும்.
கிருஷ்ணர் சிலைக்கு பூக்களால் அலங்காரம் செய்து நெய் தீபம் ஏற்றி வழிபட வேண்டும்.
கிருஷ்ண ஜெயந்தி பலகாரம்
தேங்காய், வெற்றிலை பாக்கு உள்ளிட்ட பூஜை பொருட்களுடன் கிருஷ்ணருக்கு பிடித்த வெண்ணெய், தயிர், அவல், சீடை, முறுக்கு, தேன் குழல், லட்டு போன்ற உணவுப் பொருட்களையும் கிருஷ்ண ஜெயந்தி பூஜையில் கிருஷ்ண பகவானுக்கு படைக்கலாம்.
கிருஷ்ண ஜெயந்தி விரதம்
அதிகாலையில் எழுந்ததும் குளித்துவிட்டு கிருஷ்ண ஜெயந்தி விரதத்தை தொடங்கி விடுவது நல்லது.
கிருஷ்ண ஜெயந்தி விரதம் இருப்பவர்கள் செய்ய வேண்டியவை
‘கிருஷ்ண ஜெயந்தி’ நாளில் விரதம் இருப்பவர்கள் உணவு எதுவும் எடுத்துக்கொள்ளாமல் தண்ணீர் அருந்தாமலும் விரதம் இருக்கலாம்.
ஒருவேளை நீங்கள் மருந்து எடுத்துக் கொள்ளும் நபராக இருந்தால் பழங்களை மட்டும் சாப்பிடலாம். அதுபோல நீர் அருந்தலாம். அரிசியில் சமைத்த உணவைத் தவிர ஜவ்வரிசி கஞ்சி மற்றும் சப்பாத்தி போன்ற உணவுகளை எடுத்துக் கொள்ளலாம்.
கிருஷ்ண ஜெயந்தி தினத்தில் விரதம் இருப்பவர்கள் நாள் முழுவதும் சோர்வாக இல்லாமல் இருக்க பால், பழங்கள் மற்றும் உலர் பழங்களை சாப்பிடலாம்.
‘கிருஷ்ண ஜெயந்தி’ நாளில் விரதம் இருப்பவர்கள் தேவைப்படுபவர்களுக்கு உணவு மற்றும் தண்ணீரை தானமாக கொடுப்பது மிக மிக நல்லதாகும். இதை செய்வதால் உங்களது வாழ்க்கையில் மகிழ்ச்சி என்றும் நிலைத்திருக்கும்.
கிருஷ்ண ஜெயந்தி நாளில் பசுக்களுக்கு உணவு வழங்கினால் உங்களுடைய பாவங்கள் விலகி புண்ணியம் கிட்டும்.
கிருஷ்ண ஜெயந்தி விரதம் இருப்பவர்கள் செய்யக்கூடாதவை
கிருஷ்ண ஜெயந்தி தினத்தில் உங்களது வீட்டில் வெங்காயம், பூண்டு பயன்படுத்தக் கூடாது. அதாவது அன்றைய தினத்தில் வெங்காயம், பூண்டு சேர்க்கப்படாத உணவை தான் வீட்டில் சமைக்க வேண்டும்.
இறைச்சி மற்றும் அசைவ உணவுகளை சாப்பிடக்கூடாது.
விரதம் இருப்பவர்கள் டீ மற்றும் காப்பி குடிப்பதை தவிர்ப்பது நல்லது.
விரதம் இருப்பவர்கள் உங்களால் முடிந்த அளவில் அன்றைய தினத்தில் எண்ணெய் சார்ந்த உணவுகளை தவிர்ப்பது நல்லது.
கிருஷ்ண ஜெயந்தி நாளில் விரதம் இருப்பதால் ஏற்படும் நன்மைகள்
- கிருஷ்ண ஜெயந்தி அன்று விரதம் இருப்பதால் கோடி புண்ணியங்கள் கிட்டும் என்பது நம்பிக்கை.
- வாழ்க்கையில் செல்வ செழிப்பு மற்றும் மகிழ்ச்சி ஏற்படும் என்பது நம்பிக்கை
- உடல் ஆரோக்கியத்தில் மேன்மை ஏற்படும்.
- குழந்தைகளின் கல்வியில் முன்னேற்றம் ஏற்படும்.
- கிருஷ்ண ஜெயந்தி அன்று விரதம் இருந்து கிருஷ்ணரை வழிபட்டு வந்தால் குழந்தை இல்லாதவர்களுக்கு கிருஷ்ணரே குழந்தையாக வந்து பிறப்பார் என்பது ஐதீகம்.
- திருமண தடைகள் நீங்கி திருமணம் கைகூடும்.
- விவசாயம் பெருகும். கடன் தீரும். குடும்பத்தில் அமைதி மற்றும் நிம்மதி நிலைக்கும்.
கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துக்கள் கவிதை
பார்த்தனுக்கு கீதை உபதேசித்த கிருஷ்ணனே கம்சனை அழிக்க தேவகியின் வயிற்றில் புல்லாங்குழல் மதுராவின் அருகில் பிருந்தாவனத்தில் விளையாடிய ராதாகிருஷ்ணா இனிய கிருஷ்ண ஜெயந்தி நல்வாழ்த்துக்கள் |
கிருஷ்ண ஜெயந்தி பாடல்கள்
கண்ணன் பிறந்தான் மன்னன் பிறந்தான் இனிய கிருஷ்ண ஜெயந்தி நல்வாழ்த்துக்கள் |
கேட்டதும் கொடுப்பவனே கிருஷ்ணா கிருஷ்ணா கீதையின் நாயகனே கிருஷ்ணா கிருஷ்ணா இனிய கிருஷ்ண ஜெயந்தி நல்வாழ்த்துக்கள் |
கவலைகளை உன்னிடத்தில் கருணையே அருள் செய்ய இனிய கிருஷ்ண ஜெயந்தி நல்வாழ்த்துக்கள் |
இதையும் படிக்கலாமே,
ஓரிதழ் தாமரை பயன்கள் பற்றி உங்களுக்கு தெரியுமா ? |