Happy New Year Wishes in Tamil 2025 | ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள் கவிதை
இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் 2025: வணக்கம் நண்பர்களே..! அனைவரையும் அன்புடன் வரவேற்போம். அந்த வகையில் அழகான இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்களை உங்களுக்கு நமது திட்டம் வலைதளத்தின் சார்பாக தெரிவித்துக் கொள்கிறோம்.
அதாவது உங்கள் நண்பர்கள், பெற்றோர், உறவினர்கள், உடன் பிறந்தோர், சகோதரன், சகோதரி, தம்பி, தங்கை, அக்கா, அண்ணன், காதலன், காதலி, கணவன், மனைவி என அனைத்து சொந்தங்களுக்கும் பந்தங்களுக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் 2025.
இறைவன் அருளால் இந்த புதிய வருடம் சிறப்பாக அமையட்டும்.
துன்பங்கள் அனைத்தும் விலகி இன்பங்கள் வந்து சேரட்டும். அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.! |
பிறந்த இந்த ஆண்டு புத்தாண்டு புது பொலிவுடன் வரவேற்போம். இன்று முதல் உங்கள் வாழ்வில் மாற்றம் நிகழும்.நிம்மதி நிலைக்கும். சந்தோசம் தழைக்கும்.இருள் நீங்கி இன்பம் மலரும். அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.! |
அன்றும் இன்றும் என்றும் என் நெஞ்சில் இணைந்திருக்கும் எனது நண்பர்கள் அனைவருக்கும் என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.! |
இந்த புத்தாண்டில் என்னோட முதல் வாழ்த்து எனது அன்பான உறவுகளுக்குதான். இறைவனின் அருள் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் எல்லாம் கிடைக்கட்டும். இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.! |
என் அன்புக்குரிய உறவுக்கு என் மனமார்ந்த புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.! |
Happy New Year Wishes in Tamil 2025 | ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள் கவிதை
புது உத்வேகத்துடன் புது புன்னகையுடன் புது பொலிவுடன் புது பார்வையுடன் புது பாதையில் வரவேற்போம் இந்த இனிய நாளை! இனி எல்லாம் நலமே!அனைவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். |
புத்தாண்டு திருநாளில் மகிழ்ச்சி பொங்கட்டும், அதிர்ஷ்டம் உங்கள் வீட்டிற்குள் நுழையட்டும்.
இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். |
செல்வம், ஆரோக்கியம், மகிழ்ச்சி என உங்கள் வாழ்க்கையில் அனைத்திலும் ஆனந்த மழை பொழியட்டும். இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்! |
மதங்கள், சாதிகளால் ஏற்படும் வேறுபாடுகள் அனைத்தும் களைந்து, மனிதர்கள் அனைவரும் ஓர் தாய் பிள்ளைகள் என்ற எண்ணம் அனைவரிடமும் உருவாக இந்த புத்தாண்டு வழிவகுக்கட்டும்.
இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்! |
இந்த புதிய வருடம் நீண்ட ஆயுளும் நிறைந்த செல்வமும் புகழும் இல்லத்தில் இன்பமும் உள்ளத்தில் மகிழ்ச்சியும் பெருகும் வருடமாக அமையட்டும். அனைவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.! |
கவலைகள் கரையட்டும். துன்பங்கள் தொலையட்டும். கடந்தவை அனைத்தும் மறைந்து.எண்ணங்கள் ஒளிரட்டும்.வாழ்க்கை பல வண்ணங்களாக மாறட்டும். புன்னகை பூக்கட்டும்.புது வருடத்தில் இல்லத்தில் இன்பம் பெருகட்டும். இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.! |
அனைவருக்கும் மகிழ்ச்சியும் கடவுளின் ஆசீர்வாதமும் கிடைக்க இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்! இந்த புத்தாண்டு அனைத்து துன்பங்களையும் அகற்றி மகிழ்ச்சி என்னும் ஒளியை அனைவருக்கும் தரட்டும். |
Advance Happy New Year 2025 in Tamil | அட்வான்ஸ் ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
இந்த புத்தாண்டில் உங்கள் குடும்பத்தில் ஒற்றுமையும், மகிழ்ச்சியும் நிறைய அனைவருக்கும் அட்வான்ஸ் ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் |
கடந்த காலத்தின் தேவையில்லாத நாட்களை மறந்து, இந்த புத்தாண்டில் புதிய வாழ்க்கையை தொடங்குங்கள்.இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்! |
ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள் கவிதை
புதியது என்றாலே எல்லாருக்கும் பிடிக்கும்,
புதிய ஆண்டு என்றால் சொல்லவா வேணும்!எல்லாம் மாற வேண்டும் என்று ஒரு ஆவல்,
எல்லாரிடமும் சேர்ந்து வாழ வேண்டும் என்று ஒரு ஆவல்,எண்ணியது எல்லாம் எண்ணிய படியே ஈடெற வேண்டும் என்று ஒரு ஆவல்,
இப்படி ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கும் இந்த ஆண்டில்,
எத்தனையோ வசந்தங்கள் உங்களுக்காக காத்து கொண்டிருக்கிறது,
வர இருக்கும் நாட்களை
வரமாக எடுத்துக் கொண்டு நாளும் நடை போடுவோம்!இன்பங்களை பெரிதாக்க வேண்டும் என்றால்,
துன்பங்களை சிறிதாக பாவிக்க வேண்டும்!எதில் இல்லை இன்பம்?
எல்லாவற்றிலும் இன்பம் தான், இனிதான மனம் இருக்கும் வரை,மாறாத குணம் இருக்கும் வரை,
உள்ளத்தை உனதாக்கு,
உன் வசம் உருவாக்கு!நினைத்தது எல்லாம் நடக்கும்!
நிகழ்வது எல்லாம் பிடிக்கும்!
நிம்மதி எல்லாம் கிடைக்கும்!!அனைவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
New Year Kavithai in Tamil | ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்
நிலையில்லா உலகில் எது இங்கு நிலை?
என்று நினை!
நீயே துணை!!
நகர்ந்து செல்,
தேடலை நோக்கி!
புரிந்து செல்,
விடியலை நோக்கி!!
நித்தம் ஆனந்தம் தான்!
பிறக்கும்
புத்தம் புதிய ஆண்டில்!!
அன்பிற்கினிய அனைவருக்கும் அசத்தலான ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் 💐
இந்த ஆங்கில புத்தாண்டு வாழ்த்து கவிதையை வழங்கியவர் R.K ராகுல் அவர்களுக்கு நன்றி.
இதையும் படிக்கலாமே,
Happy Raksha Bandhan Wishes in Tamil | ரக்ஷா பந்தன் வாழ்த்துக்கள் 2024 |