ஊர்களின் தமிழ்ப் பெயர்கள் | ஊர்களின் பழைய பெயர்கள் | ஊர் பெயர்களின் மரூஉ

THITTAM AUTHOR

By THITTAM

Published on:

Join Telegram Channel Join WhatsApp Channel
ஊர்களின் தமிழ்ப் பெயர்கள்

ஊர்களின் தமிழ்ப் பெயர்கள்

ஊர்களின் பழைய பெயர்கள்

ஊர் பெயர்களின் மரூஉ

தற்போதைய ஊர் பெயர்கள் ➨ பழைய ஊர் பெயர்கள் (மரூஉ)

1. புதுக்கோட்டை ➨ புதுகை

2. தஞ்சாவூர் ➨ தஞ்சை, தன்செய்யூர்

3. திருச்சிராப்பள்ளி ➨ திருச்சி

4. உதகமண்டலம் ➨ உதகை

5. கோயம்புத்தூர் ➨ கோவை

6. நாகப்பட்டினம் ➨ நாகை

7. புதுச்சேரி ➨ புதுவை

8. கும்பகோணம் ➨ குடந்தை, குடமூக்கு

9. திருநெல்வேலி ➨ நெல்லை

10. மன்னார்குடி ➨ மன்னை

11. மயிலாப்பூர் ➨ மயிலை

12. சைதாப்பேட்டை ➨ சைதை

13. ஊட்டி ➨ உதகமண்டலம், மாந்தை

14. ஆற்காடு ➨ ஆருக்காடு

15. நாமக்கல் ➨ ஆரைக்கல்

16. ஈரோடு ➨ ஈரோடை

17. ஏற்காடு ➨ ஏரிக்காடு

18. மைசூர் ➨ எருமையூர், மகிசூர்

  • “எருமை” க்கு வடமொழியில் மகிசம் என்பது பொருள்.

19. கரூர் ➨ கரவூர், கருவூர், வஞ்சி

20. குன்னூர் ➨ குன்றூர்

21. குளித்தலை ➨ குளிர்தண்டலை

22. கோடம்பாக்கம் ➨ கோடலம்பாக்கம்

23. சிந்தாரிபேட்டை ➨ சின்னதறிப்பேட்டை

24. செங்கல்பட்டு ➨ செங்கழுநீர் பட்டு, செங்கை

25. பழனி ➨ திருஆவினம் குடி

26. திருத்தணி ➨ திருத்தணிகை

ஊர்களின் தமிழ்ப் பெயர்கள்

27. தருமபுரி ➨ தகடூர்

28. சேலம் ➨ சேரலம்

29. தாம்பரம் ➨ தர்மபுரம்

30. திண்டுக்கல் ➨ திண்டீஸ்வரம்

31. திருச்செந்தூர் ➨ திருச்சீரலைவாய்

32. ஸ்ரீரங்கம் ➨ திருவரங்கம்

33. சிதம்பரம் ➨ தில்லை

34. வேதாரண்யம் ➨ திருமறைக்காடு

35. பழவேற்காடு ➨ புலிக்காடு

36. திண்டிவனம் ➨ புளியங்காடு

37. திருநின்றவூர் ➨ தின்னனூர்

38. வத்தலக்குண்டு ➨ வெற்றிலைக்குண்டு

39. பெங்களூர் ➨ வெண்கல்லூர்

40. பொள்ளாச்சி ➨ பொழில் ஆட்சி

41. அருப்புக்கோட்டை ➨ திருநல்லூர்

42. திரிசூலம் ➨ திரிச்சூர், திருச்சுரம்

43. மதுரை ➨ மதிரை

44. ஒகேனக்கல் ➨ உகுநீர்க்கல், புகைநற்கல்

45. கயத்தாறு ➨ கசத்தியாறு

46. சோழலிங்கபுரம் ➨ சோளிங்கர்

47. லால்குடி ➨ தவத்துறை

48. திருச்செங்கோடு ➨ திருக்கொடிமாடச் செங்குன்றூர்

49. சிவகங்கை ➨ நாலுக்கோட்டை

50. பழவந்தாங்கல் ➨ பல்லவன் தாங்கல்

51. பழமுதிர்சோலை ➨ பழம் உதிர் சோலை

52. விருதாச்சலம் (வடமொழி) ➨ முதுகுன்றம்

53. தாராசுரம் ➨ ராஜராஜேஸ்வரம்

54. கோலார் (தங்க வயல்) ➨ குவளாலபுரம்

இதையும் படிக்கலாமே

தமிழ்நாடு அரசு விருதுகள் | சுதந்திர தின விழா விருதுகள் 2024
THITTAM AUTHOR

THITTAM

Leave a Comment