TAMIL NADU STATE COMMISSION FOR WOMEN
தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையம் பற்றிய குறிப்புகள்
தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையம்
- பெண்களின் உரிமையை பாதுகாத்தல் மற்றும் சமத்துவத்தை வழங்குதல்.
- தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையம் என்பது ஒரு சட்ட ரீதியான அமைப்பாக செயல்படுகிறது.
Statutory Body – சட்ட அமைப்பு
தொடக்கம்: 1993 ஆம் ஆண்டு
ஆணையத்தின் உறுப்பினர்கள்:
ஒரு தலைவர் மற்றும் ஒன்பது உறுப்பினர்கள்.
ஆணையத்தின் நோக்கங்கள்:
- பெண்களின் பாதுகாப்பு மற்றும் நலனை உறுதி செய்தல்.
- பாலினம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளை தீர்த்து வைத்தல்.
- பெண்களுக்கான உரிமைகளை பாதுகாத்தல்.
- பெண்களுக்கு எதிரான குற்றங்களை பற்றி விசாரித்தல்.
மகளிர் ஆணையத்தின் செயல்பாடுகள்:
- அரசியலமைப்பின் கீழ் வழங்கப்பட்டுள்ள விதிகள் மற்றும் பாதுகாப்பு அம்சங்களை பின்பற்றுதல்.
வரதட்சணை தடுப்பு சட்டம் ➨ 1961
குடும்ப வன்முறையிலிருந்து பெண்களைப் பாதுகாக்கும் சட்டம் ➨ 2005
பணிபுரியும் இடங்களில் பாலியல் வன்முறைகளில் இருந்து பெண்களை பாதுகாக்கும் சிறப்பு சட்டம் (தடுப்பு, தடை மற்றும் தீர்வு) ➨ 2013
பெண்களை இழிவாகக் காட்டுவதைத் தடுக்கும் சட்டம் ➨1986
IRWA ➨ Indecent Representation of Women (Prohibition) Act, 1986
மேற்கண்ட சட்டங்கள் முறையாக செயல்படுவதை இவ்வாணையம் உறுதி செய்கிறது.
- பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை விசாரணை செய்து உடனடியாக தீர்வு வழங்கும் அமைப்பு.
- பெண்கள் தொடர்பான பல்வேறு பிரச்னைகள் குறித்து அரசுக்கு பரிந்துரை செய்தல்.
- பெண்களுக்கான நீதி மறுக்கப்படும் பட்சத்தில்,சட்ட விதிகளில் திருத்தங்களை செய்ய இந்த ஆணையம் பரிந்துரை செய்கிறது.
- பெண்களின் உரிமை மீறல் தொடர்பான பிரச்சனைகளை ஆய்வு செய்து அதற்கு தீர்வினை வழங்குகிறது.