Pongal Wishes in Tamil 2025 | இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் கவிதை
உழவர்கள் தைப்பொங்கல் திருநாளில் தமது வேளாண்மைக்கு உதவி செய்த சூரிய பகவானுக்கு நன்றி செலுத்தும் விதமாக பொங்கல் திருநாளை கொண்டாடி வருகின்றனர். உங்கள் அனைவருக்கும் திட்டம் வலைத்தளம் சார்பாக இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.
உழவர்கள் மட்டுமல்லாமல் ஒவ்வொரு மனிதனும் சூரியனுக்கு நன்றி கூறும் நாளாக இந்த தைப்பொங்கலை நாம் கொண்டாடி வருகிறோம். இது தமிழர்களின் சிறப்பு பண்டிகையாக கொண்டாடப்பட்டு வருகிறது.
பொங்கல் திருவிழா நாளை தொடங்குகிறது. முதல் பண்டிகையாக போகி தொடங்கி, தைப் பொங்கல், மாட்டுப் பொங்கல், உழவர் திருநாள் என வரிசைக் கட்டி வரும் பண்டிகைக்கு வாழ்த்துகளை பரிமாறுவது இயல்பான ஒன்று.
ஜனவரி 14, 2025 ➨ தைப்பொங்கல் அல்லது சூரிய பொங்கல் அல்லது பெரும் பொங்கல் |
நாம் தைப்பொங்கல் திருநாளை பல்வேறு விதமாக அழைக்கின்றோம். தைப்பொங்கல் திருநாளை நாம் சூரிய பொங்கல் எனவும் பெரும் பொங்கல் எனவும் குறிப்பிடுகிறோம்.
இன்று பொங்கல் வைக்க நல்ல நேரம் |
Pongal Wishes in Tamil 2025 | தைப்பொங்கல் 2025
தை முதல் நாள் ஆனது பெரும் பொங்கல் அல்லது சூரியப் பொங்கல் என்று அழைக்கப்படுகிறது. இந்தப் பொங்கல் ஆனது சூரிய பகவானின் வழிபாட்டுக்குரிய நாளாகும். அனைவருக்கும் இனிய பெரும் பொங்கல் நல்வாழ்த்துக்கள்.
தை பொங்கல் நாளில் சூரிய உதயத்தில் திறந்த வெளியில் உணவு சமைக்கப்படுகிறது.
பக்தர்கள் சூரிய பகவானுக்கு பால் மற்றும் வெல்லம் காணிக்கையாக வைத்து பெரும் பொங்கல் படைக்கின்றனர். நான்கு நாட்கள் நடைபெறும் திருவிழாவின் முக்கிய நாள் இதுவாகும். சூரிய பகவானுக்கு மிகவும் பிடித்த ஒன்று சர்க்கரை பொங்கல் ஆகும். அதனால்தான் அதை சூரிய பகவானுக்கு படைத்து பெரும் பொங்கல் கொண்டாடுகிறோம்.
பொங்கல் திருநாள் அனைவருக்கும் உடல்நலத்தையும், மகிழ்ச்சியையும் தரட்டும். கடினமாக உழைத்து வரும் நமது விவசாய பெருங்குடி மக்களின் வாழ்வில் வளத்தை கொண்டு வந்து சேர்க்கட்டும்..
தமிழர் திருநாள் இது தமிழர்களின் வாழ்வை வளமாக்கும் திருநாள்… உழைக்கும் உழவர்களின் களைப்பை போக்கி களிப்பில் ஆழ்த்தும் உற்சாகப்படுத்தும் திருநாள்…
Pongal Wishes in Tamil 2025 | பொங்கல் வாழ்த்துக்கள் 2025
இந்த இனிய பொங்கல் திருநாளில் உங்கள் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு பொங்கல் வாழ்த்து புகைப்படங்களை நீங்கள் அனுப்பி மகிழ, நாங்கள் பொங்கல் வாழ்த்து கவிதைகள் (Pongal Wishes in Tamil) மற்றும் பொங்கல் வாழ்த்து புகைப்படங்கள் (Pongal Wishes Images in Tamil) என பல்வேறு புகைப்படங்களை தொகுத்து கொடுத்துள்ளோம். அவையெல்லாம் தங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையட்டும்.
வாருங்கள் நண்பர்களே, தைப்பொங்கல் வாழ்த்துக்கள் 2025 புகைப்படங்களை நாம் இங்கே பார்க்கலாம்.
|
அன்பு பொங்க, ஆசைகள் பொங்க இன்பம் பொங்க, இனிமை பொங்க என்றும் உங்கள் வீட்டில் மகிழ்ச்சி பொங்க பொங்கலோ பொங்கல் வாழ்த்துகள்! |
அறுவடைத் திருநாளாம் பொங்கல் நன்னாளில் தமிழர்கள் வாழ்வில் அன்பும் அமைதியும் நிலவட்டும் நலமும், வளமும் பெருகட்டும் அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.. |
Pongal Wishes in Tamil 2025 | பொங்கல் வாழ்த்து கவிதை
பொன்னான இந்நாளை!
பொங்கலிட்டு
இனிதாக தொடங்குவோம்!தை முதல் நாள், தமிழரின் தனி திருநாள்!
தொன்று தொட்டு தொடரும், நம்
முன்னோர்களின்
ஆகப் பெரும் நாள்!!உலகத்துக்கே முன்னோடியாக திகழும், தமிழ் பாரம்பரியத்தின் அடையாளத்தை,
வளம் மிகுந்த வாழ்வை,
வழி காட்டி சென்ற
நம் பரம்பரையை போற்றி வணங்குவோம்!பாசத்திற்கும், நேசத்திற்கும் உரிய
சொந்த பந்தங்களுடனும், உருத்தான நண்பர்களுடனும்,
உற்றார் உறவினர்களுடனும்,
ஊர் கூடி,
எல்லாம்
ஒன்று கூடி
உற்சாகமாக,சூரிய பகவான் ஆசியுடன்,
பூக்களின் வாசனையுடன்,
கரும்பின் ருசியுடன்,நாளெல்லாம் கஷ்டப்பட்டு உழைத்து , கண் அயராது பாடுபட்டு,
காலம் மெல்ல மெல்ல கனிந்து,
கதிர் வரும் வரை காத்திருந்து,கடைசியாக பெற்ற வெற்றி திருநாளை போற்றி, இறைவன் ஆசியுடன் பொங்கலிட்டு,
ஒன்று சேர உண்டு மகிழ்ந்து, உள்ளம் நெகிழ்ந்து, உல்லாசமாக வரவேற்போம்!!
புத்தம் புதிய பொங்கலை!!என்றும் வாழ வைப்பான் இறைவன்,
விவசாய பெரும்
குடி மக்களாகிய
நம்மளை!!கூடி வாழ்ந்தால் கோடி நன்மை!
கூடி உயர்ந்தால் ,
உலகம் தேடி வரும் நம்மை!!அறுபடை முருகன் துணையோடு,
அறுவடைக்கு செல்வோம்,
பெரும் படை கொண்டு,
பிரமாதமாக
நெல் கொள்முதல்
செய்வோம்,இயற்கை அன்னையிடம் பெற்ற பலனை, கொண்டு உலகத்துக்கும் அன்னமிடுவோம்!
யாவரும்
நல்வாழ்வு பெற நாம் அனைவரும் உறுதுணையாக இருப்போம்!ஓய்வறியா வாழ்க்கையை,
ஓங்கி உயர்ந்து இருக்கும் நெற்கதிர் சொல்லும்,உண்மையான உழைப்பின் பெருமையை!
செம்மையான
காக்கும் உரிமையை!மானுடனுக்கு மட்டும் அல்ல, மற்ற உயிர்களுக்கும் தான் இந்த உற்பத்தி எல்லாம்.. 🌾
மண்ணின் வகை அறிந்து,
மரபின் குணம் புரிந்து,
கால சூழ்நிலை தெரிந்து,பக்குவமாய் பயிரிட்டு
பங்கிட்டு கொடுக்கும்,
பாதி இறைவன் அல்லவா இவர்கள்..!தென்றல் காற்று வீச, தரணி எங்கும் செல்லும் பயிரின் மனம்,
கண்கள் சற்றும் அயராமல் , மீண்டும் பார்க்க சொல்லும்,
எழில் சூழ்ந்த அழகை,
உழவன் தந்த
உலகை!!அறிவியல் பூர்வமான செயல்களை
அனுபவ பூர்வமாக செய்யும் ஆசான் அல்லவா இவர்கள்!ஆரோக்கியமான வாழ்விற்கு,
ஆக்கபூர்வமான அடித்தளம் அல்லவா இவர்கள்,இது தொழில் மட்டும் அல்ல, உலகத்துக்கு வேண்டிய சேவை,
அதுவே எந்நாட்டுக்கும்
என்றைக்கும் தேவை!!விட்டு விட கூடாது,
விட்டு விடவே கூடாது,இவர்களின்
ஒவ்வொரு விடியலின் தொடக்கமும்,பசியால் வாடும் அத்துணை குடும்பத்தின்
ஏக்கத்தையும்,
எதிர் காலத்தில் ஏற்பட போகும் தாக்கத்தையும் போக்க வழி வகை செய்கிறது,ஊக்குவிக்க வேண்டும்,
இனி வரும் தலைமுறையை,
பொங்கல் திருநாளின் மகத்துவத்தையும்,
மனிதத்துவத்தையும்🌱அனைவருக்கும்
இனிய
பொங்கல் நல்வாழ்த்துக்கள்
உங்கள் இல்லங்களிலும் உங்கள் உள்ளங்களிலும் மகிழ்ச்சி பொங்கட்டும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் |
அன்பு பொங்க, நேர்மை தங்க வளமை செழிக்க, வலிமை சிறக்க அறிவு பெருக, இனிமை பொங்க அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் |
கரும்பின் சுவை போல உங்கள் வாழ்க்கையில் என்றென்றும் மகிழ்ச்சி தித்திக்கட்டும் அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் |
Pongal Wishes in Tamil 2024 | பொங்கல் வாழ்த்து அட்டை
தை பிறந்தால் வழி பிறக்கும் தரணி எங்கும் வளம் செழிக்கும் இதயங்களில் புன்னகை பூக்கும் உதயமாகும் செங்கதிர் போல… இனிக்கட்டும் உங்கள் வாழ்க்கை இனிக்கும் செங்கரும்பை போல… அனைவருக்கும் இனிய தைப்பொங்கல் நல்வாழ்த்துக்கள் |
அனைத்து தமிழர்களுக்கும் பொங்கல் நல்வாழ்த்துக்கள் |
வருகிறது தைப்பொங்கல் வளம் தரும் சூரிய பொங்கல் அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் |
அன்பும் ஆனந்தமும் பொங்க அறமும் வளமும் தழைக்க இல்லமும் உள்ளமும் சிறக்க அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் |
அனைவருக்கும் இனிய தமிழர் திருநாள் நல்வாழ்த்துக்கள் |
Pongal Wishes in Tamil 2025 | தமிழர் திருநாள் பொங்கல் வாழ்த்துக்கள்
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய தைப்பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள் |
உங்கள் அனைவருக்கும் என் இதயம் கனிந்த பொங்கல் நல்வாழ்த்துக்கள் |
வளமும் நலமும் செழிக்க அன்பும் பண்பும் பெருக உறவும் நட்பும் சேர்ந்திட இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் |
HAPPY PONGAL அனைவருக்கும் இனிய தைப்பொங்கல் நல்வாழ்த்துக்கள் |
பொங்கலோ பொங்கல் சகோதர சகோதரிகளுக்கு இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் |
அனைவருக்கும் இனிய தைப்பொங்கல் தமிழர் திருநாள் நல்வாழ்த்துக்கள் |
நல்லதொரு வாழ்க்கை அமைய இல்லத்தில் அஷ்ட லட்சுமிகளும் தங்க இந்நாளைப் போல் எந்நாளும் கரும்பை போல் தித்திக்க இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் |
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய தைப்பொங்கல் நல்வாழ்த்துக்கள் |
இனிய தைத்திருநாள் நல்வாழ்த்துக்கள் |
மாட்டுப் பொங்கல் கவிதை
தங்களது வியர்வையை மண்ணுக்கு உரமாக்கி.. வெயில் மழை என பாராமல் பாடுபட்டு… விளைத்தெடுத்த நெல்மணிகளை புதுப்பானையில் போட்டு பொங்கலிட்டு… தைப்பொங்கலை கொண்டாடும் அனைவருக்கும் இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள் |