தினம் ஒரு திருக்குறள் | Dhinam Oru Thirukural
வான் சிறப்பு
திருக்குறள்:
விண்இன்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்து
உள்நின்று உடற்றும் பசி.
அருஞ்சொல் பொருள்:
விண்இன்று பொய்ப்பின் ➨ மழை வேண்டுங்காலத்துப் பெய்யாது பொய்க்கும் ஆயின்
விரி நீர் வியன் உலகத்துள் ➨ கடலால் சூழப்பட்ட அகன்ற உலகத்தின்கண்
நின்று உடற்றும் பசி ➨ நிலை பெற்று உயிர்களை வருத்தும் பசி.
விளக்கம்:
உரிய காலத்தே மழை பெய்யாது பொய்க்குமானால், கடல்நீர் சூழ்ந்த உலகமாயினும், மழைநீர் பொய்த்துவிட்டால் பசியின் கொடுமை வாட்டி வதைக்கும்.