மத்திய பட்ஜெட் 2025-2026 சிறப்பம்சங்கள் | Budget 2025 Highlights in Tamil
2025-2026ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். மத்திய பட்ஜெட் பற்றிய தகவல்கள் மற்றும் அதில் இடம்பெற்றுள்ள சிறப்பு அம்சங்களை பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.
மதுபானி கலையையும் பத்மஸ்ரீ விருது பெற்ற துலாரிதேவியின் திறமையை போற்றும் வகையிலும் அவரால் தயாரிக்கப்பட்ட மதுபானி புடவையை அணிந்து நாடாளுமன்றத்திற்கு வருகை தந்தார் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்.
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அணிந்த புடவையின் சிறப்பு
பட்ஜெட் தாக்கலின் போது மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அணிந்துள்ள புடவை “மதுபானி” புடவையாகும்.
மதுபானி கலை மற்றும் பத்மஸ்ரீ விருது பெற்ற துலாரி தேவியின் திறமையை போற்றும் வகையில் சேலை அணிந்துள்ளார்.
துலாரி தேவி 2021 ஆம் ஆண்டு பத்மஸ்ரீ விருது பெற்றவர்.
மிதிலா ஆர்ட் இன்ஸ்டிட்யூட்டில் கிரெடிட் அவுட்ரீச் செயல்பாட்டிற்காக நிதி அமைச்சர் மதுபானிக்குச் சென்றபோது, அவர் துலாரி தேவியைச் சந்தித்து பீகாரில் உள்ள மதுபானி கலையைப் பற்றிய எண்ணங்களை அன்புடன் பரிமாறிக் கொண்டார்.
துலாரி தேவி மதுபானி புடவையை பரிசாக அளித்துள்ள நிலையில் பட்ஜெட் தினத்தில் அந்த புடவையை நிதி அமைச்சர் அணிந்துள்ளார்.
மதுபானி ஓவியம்
பீகார் மாநிலம் மிதிலா பகுதியில் மதுபானி மாவட்டத்தில் வரையப்படும் ஓவியம் மதுபானி அல்லது மிதிலா ஓவியம் என்று அழைக்கப்படுகிறது.
வருடாந்திர நிதிநிலை அறிக்கையை பற்றி குறிப்பிடும் அரசியலமைப்பு விதி ➨ 112
மத்திய பட்ஜெட் தாக்கல்
மக்களவையில் 2025-2026 க்கான மத்திய பட்ஜெட்டை தொடர்ந்து 8வது முறையாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்.
2019-2020, 2020-2021, 2021-2022, 2022-2023
2023-2024, 2024-2025 (இடைக்கால பட்ஜெட்)
2024-2025, 2025-2026
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வாசித்த பட்ஜெட் உரைகளின் நீளம்
2019-2020 ➨ 2.15 மணி நேரம்
2020-2021 ➨ 2.42 மணி நேரம்
2021-2022 ➨ 1.40 மணி நேரம்
2022-2023 ➨ 1.32 மணி நேரம்
2023-2024 ➨ 1.26 மணி நேரம்
2024-2025 (இடைக்கால பட்ஜெட்) ➨ 57 நிமிடங்கள்
2024-2025 ➨ 1.25 மணி நேரம்
2025-2026 ➨ 1.15 மணி நேரம்
மத்திய பட்ஜெட் உரையில் இடம் பெற்ற திருக்குறள்
குறள் எண்: 542
பால்: பொருட்பால்
இயல்: அரசியல்
அதிகாரம்: செங்கோன்மை
”வானோக்கி வாழும் உலகெல்லாம் மன்னவன்
கோல்நோக்கி வாழுங் குடி.”
என்ற திருக்குறளை மேற்கோள் இட்டு மத்திய பட்ஜெட்டில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் பேசினார்.
திருக்குறளின் விளக்கம் (மு.வரதராசன் உரை)
- உலகத்தில் உள்ள உயிர்கள் எல்லாம் மழையை நம்பி வாழ்கின்றன. அதுபோல் குடிமக்கள் அனைவரும் அரசனுடைய செங்கோலை நோக்கி வாழ்கின்றனர்.
மத்திய பட்ஜெட் உரையில் இடம் பெற்ற தெலுங்கு கவிதை
‘தேசம் என்பது மண் அல்ல, மக்கள்’
என பட்ஜெட் உரையின்போது தெலுங்கு எழுத்தாளர் குரஜாடா அப்பாராவின் கவிதையை மேற்கோள்காட்டி நாடாளுமன்றத்தில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசினார்.
மத்திய பட்ஜெட் 2025-2026 இன் படி முக்கிய துறைகளுக்கு நிதி ஒதுக்கீடு எவ்வளவு?
போக்குவரத்து ➨ ₹5.48 லட்சம் கோடி
பாதுகாப்பு ➨ ₹4.91 லட்சம் கோடி
வேளாண்மை ➨ ₹1.71 லட்சம் கோடி
கல்வி ➨ ₹1.28 லட்சம் கோடி
சுகாதாரம் ➨ ₹98,311 கோடி
உள்துறை ➨ ₹2.33 லட்சம் கோடி
ஊரக வளர்ச்சி ➨ ₹2.66 லட்சம் கோடி
நகர்ப்புற வளர்ச்சி ➨ ₹69,777 கோடி
சமூக நலன் ➨ ₹60,052 கோடி
வரிச் சலுகை
- வருமான வரி விலக்கு உச்ச வரம்பு ₹12 லட்சமாக அதிகரிப்பு
- தனிநபர் வருமான வரிக்கான உச்சவரம்பு ரூ.7 லட்சத்தில் இருந்து ரூ.12 லட்சமாக அதிகரிப்பு
- இனி மாதம் ரூ. 1 லட்சம் வரை வருமானம் பெறுவோர் வரி செலுத்தத் தேவையில்லை.
- வருமான வரி கணக்கை தாக்கல் செய்வதற்கான கால வரம்பு 2 ஆண்டிலிருந்து 4 ஆண்டுகளாக உயர்வு.
தனிநபர் வருமான உச்சவரம்பு உயர்த்தப்பட்ட விவரம் ஆண்டு வாரியாக,
2005: ₹1 லட்சம்
2012: ₹2 லட்சம்
2014: ₹2.5 லட்சம்
2019: ₹5 லட்சம்
2023: ₹7 லட்சம்
2025: ₹12 லட்சம்
ஆண்டு வருமானம் ரூ.24 லட்சத்திற்கும் அதிகமான தனிநபர்களுக்கு 30% வரிவிதிப்பு
வரி மாற்றங்களால் நேரடி வரிகளில் சுமார் ரூ.1 லட்சம் கோடி வருவாய் இழப்பு அரசுக்கு ஏற்படும். என மத்திய பட்ஜெட்டில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தகவல்.
- புதிய வருமான வரி மசோதா அடுத்த வாரம் தாக்கல் செய்யப்படும் என அறிவிப்பு
- 63 ஆண்டுகள் பழமையான வரி நடைமுறைகள் மாற்றியமைக்கப்பட உள்ளன.
- நடுத்தர மக்களின் சுமையை குறைக்கும் விதமாக புதிய வருமான வரி சட்ட மசோதா இருக்கும்.
- புதிய வரி மசோதா வரி செலுத்துவோருக்குப் புரியும் வகையில் எளிமையாக இருக்கும்.
- முதியோருக்கான வட்டி வருவாயில் ₹1 லட்சம் வரை வருமான வரி கிடையாது.
- வருமான வரி உச்ச வரம்பு ரூ.12 லட்சமாக அதிகரிப்பு
- வீட்டு வாடகை TDS உச்ச வரம்பு ரூ.2.40 லட்சத்தில் இருந்து ரூ.6 லட்சமாக அதிகரிப்பு
- TDS முறையில் மாற்றம் செய்யப்படும்.
- TCS இன் வரம்பு ₹7 லட்சத்திலிருந்து ₹10 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.
- வாடகையில் TDS வரம்பு ₹6 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.
- கல்வி கடன்களில் TCS ஐ ₹10 லட்சம் வரை நீக்குவதற்கான திட்டம்
- “கொண்டு வரப்பட உள்ள புதிய வரி சீர்திருத்தத்தில் நடுத்தர வருமான வகுப்பினருக்கு சிறப்பு கவனம் செலுத்தப்படும்”
பட்ஜெட் உரையின் முக்கிய அம்சங்கள்
வரி, மின்சாரம், நிதி, சீர்திருத்தம் உள்ளிட்ட 6 அம்சங்களுக்கு இந்த பட்ஜெட்டில் முக்கியத்துவம்.
பட்ஜெட்டில் 6 அம்சங்களுக்கு முக்கியத்துவம்
1.விவசாயம்
2.மின்சாரத் துறை
3.நகர்ப்புற மேம்பாடு
4.சுரங்கம்
5.நிதித் துறை
6.ஒழுங்குமுறை சீர்திருத்தங்கள்
- மீன் வளத்தை அதிகரிக்க புதிய திட்டங்கள் மத்திய பட்ஜெட்டில் அறிவிப்பு.
- பீகார் மாநில விவசாயிகள், கூட்டுறவு அமைப்புகள் வளர்ச்சிக்காக புதிய திட்டங்கள் அறிவிப்பு.
- பீகாரில் புதிய விமான நிலையம் (பசுமை விமான நிலையம்) அமைக்கப்படும். பாட்னா விமான நிலையம் விரிவாக்கம் செய்யப்படும் என அறிவிப்பு
- பீகாரில் உணவு பதப்படுத்துதல் தேசிய நிறுவனம் அமைக்கப்படும்.
- பீகார் மாநிலத்திற்கு என்று பிரத்யேக நீர்ப்பாசன திட்டங்கள் உருவாக்கப்படும்.
- பீகாரில் உள்ள ஐஐடி பாட்னா விரிவுபடுத்தப்படும் என அறிவிப்பு
- தாமரை விதை உற்பத்தியை ஊக்குவிக்க புதிய வாரியம் பீகாரில் உருவாக்கப்படும்.
- விவசாயத்தை மேம்படுத்த சிறப்பு திட்டம் உருவாக்கப்படும்.
- அஸ்ஸாமில் யூரியா உற்பத்தி தொழிற்சாலை அமைக்கப்படும் என்று பட்ஜெட்டில் அறிவிப்பு.
- சிறந்த வகை பருத்தி சாகுபடியை அதிகரிக்க புதிய திட்டங்கள் அறிவிப்பு.
- தபால் நிலையங்கள் மூலம் ஊரக பகுதிகளை முன்னேற்ற திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளது.
- கிசான் கிரெடிட் கார்டு மூலம் 7.7 கோடி விவசாயிகளுக்கு குறுகிய கால கடன் பெற நடவடிக்கை எடுக்கப்படும். இந்த கடன் அட்டை மூலம் ரூ.5 லட்சம் வரை கடன் வழங்க திட்டம்.
- கூட்டுறவு துறைக்கு கூடுதல் கடன் வசதி அளிக்கப்படும்.
- பட்டியலின பெண் (எஸ்சி/எஸ்டி) தொழில்முனைவோர்களின் முன்னேற்றத்திற்கு புதிய திட்டங்கள். இவர்கள் சுயதொழில் மூலம் முன்னேற ரூ.2 கோடி வரை கடன் வழங்கப்படும் என அறிவிப்பு.
- இந்திய மின்சார தேவையை சமாளிக்கும் நோக்கில் அணு உலை மூலம் மின்சார உற்பத்தியை அதிகரிக்க திட்டம். 2047-ம் ஆண்டுக்குள் 100 கிகா.வாட் அணுமின் உற்பத்தி செய்ய திட்டம் என மத்திய பட்ஜெட்டில் அறிவிப்பு.
- சிறிய அணுஉலைகளுக்கான ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அணுசக்தி இயக்கம் உருவாக்கப்படும்.
- அரசுப் பள்ளிகளில் அடுத்த 5 ஆண்டுகளில் 50,000 அடல் சிந்தனை ஆய்வகங்கள் அமைக்கப்படும். அதாவது அரசுப் பள்ளிகளில் மாணவர்களுக்கான திறன்களை மேம்படுத்தும் நோக்கில் 50,000 டிங்கரிங் ஆய்வகங்கள் அமைக்கப்படும்.
- உடான் திட்டம் மூலம் இந்தியாவில் மேலும் 120 இடங்களில் விமான நிலையங்கள் அமைக்கப்படும். அதாவது, 120 புதிய இடங்களுக்கு உள்ளூர் விமான இணைப்பை மேம்படுத்துவதற்காக மாற்றியமைக்கப்பட்ட உடான் திட்டம் தொடங்கப்படும். அடுத்த 10 ஆண்டுகளில் 4 கோடி கூடுதல் பயணிகளை உருவாக்கத் திட்டம்
திறன் அங்கன்வாடி மற்றும் ஊட்டச்சத்து 2.0 திட்டத்திற்கு மேம்படுத்தப்பட்ட ஊட்டச்சத்து ஆதரவு அதிகரிப்பு. இந்தியாவில் 8 கோடி குழந்தைகள் அங்கன்வாடிகள் மூலம் பயன்பெற்று வருகின்றனர். அங்கன்வாடி குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து வழங்க நடவடிக்கை.
சர்வதேச வர்த்தகத்தில் வர்த்தக ஆவணப்படுத்தல், நிதித் தீர்வுகளுக்கான ஒருங்கிணைந்த தளமாக ‘பாரத் டிரேட் நெட்’ அமைக்கப்பட உள்ளது.
பாரத் நெட் திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் உள்ள அரசு உயர்நிலை பள்ளிகளில் பிராட்பேண்ட் இணைய வசதி.
மாணவர்களுக்கான பாடங்களை தாய்மொழியில் டிஜிட்டல் முறையில் வழங்க திட்டம்
ஆன்லைன் தொழில் சார்ந்த ஊழியர்களுக்கு புதிய காப்பீட்டு திட்டம் கொண்டுவரப்படும்.
AI (செயற்கை நுண்ணறிவு) தொழில்நுட்பத்தை விவசாயம் உள்ளிட்ட துறைகளுக்கு பயன்படுத்தும் வகையில் 500 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு.
சுகாதாரம், வேளாண்மை உள்ளிட்ட 3 துறைகளில் AI மையம் அமைக்கப்படும்.
அடுத்த 3 ஆண்டுகளில் அனைத்து மாவட்ட மருத்துவமனைகளில் புற்றுநோய் சிகிச்சை மையம் அமைக்கப்படும் என அறிவிப்பு.
உள்கட்டமைப்பு முதலீடுகளுக்காக ₹1.5 லட்சம் கோடி, மாநிலங்களுக்கு வட்டியில்லாத கடன் வழங்கப்படும்.
ஒவ்வொரு வீட்டுக்கும் குடிநீர் குழாய் என்ற திட்டத்தில் 100% இலக்கை அடைய, ஜல் ஜீவன் திட்டம் 2028ம் ஆண்டு வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
சாலையோர வியாபாரிகளுக்கான கடன் உதவி ₹30,000 -ஆக அதிகரிப்பு
மின் வாகனம் விலை குறைகிறது. லித்தியம் பேட்டரிகளின் வரி குறைப்பால் மின்சார வாகனங்களின் விலை குறைகிறது. லித்தியம் பேட்டரிக்கான இறக்குமதி சுங்கவரி ரத்து
36 உயிர் காக்கும் மருந்துகளுக்கு வரி இல்லை. அதாவது 200 புற்றுநோய் சிகிச்சை மையங்கள் அமைக்க திட்டம். புற்றுநோய் உள்ளிட்ட உயிர்காக்கும் 36 மருந்துகளுக்கு இறக்குமதி வரி தள்ளுபடி
காப்பீடு துறையில் அந்நிய முதலீட்டு வரம்பு 74% இல் இருந்து 100%ஆக அதிகரிப்பு.
வரும் நிதியாண்டில் ரூ.14.82 லட்சம் கோடி கடன் வாங்க திட்டமிடப்பட்டுள்ளது.
52 சுற்றுலாத்தலங்கள் மாநில அரசுகளின் பங்களிப்புடன் மேம்படுத்தப்படும். வேலைவாய்ப்பு சார்ந்த வளர்ச்சிக்கான ஒரு துறையாக சுற்றுலாத் துறை ஊக்குவிக்கப்படும்.
எல்.இ.டி. திரைக்கான இறக்குமதி சுங்கவரி 20% ஆக அதிகரிப்பு
Gig Workers என அழைக்கப்படும் உணவு டெலிவரி உள்ளிட்டவற்றை மேற்கொள்ளும் முறைப்படுத்தப்படாத தொழிலாளர்கள் இ-ஷ்ரம் (e-shram) இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம் என மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தொழிலாளர்களுக்கு மத்திய அரசின் காப்பீடு திட்டத்தின் கீழ் சுகாதார காப்பீடு வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் உற்பத்தி செய்வதை மேலும் அதிகரிக்க சிறிய, நடுத்தர, பெரிய தொழில்களை ஊக்குவிக்கும் “தேசிய உற்பத்தி இயக்கம்”. சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கான கடன் உச்சவரம்பு ரூ.10 கோடியாக உயர்த்தப்படுகிறது.
விண்வெளித்துறை வளர்ச்சிக்காக தேசிய அளவில் ஜியோ ஸ்பேஸ் இயக்கம் உருவாக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
“ஏழைகள், இளைஞர்கள், விவசாயிகள், பெண்கள் ஆகியோரின் வளர்ச்சிக்கான நடவடிக்கைகள் இந்த பட்ஜெட்டில் மேற்கொள்ளப்பட்டுள்ளன”
இலக்கு: பருப்பு உற்பத்தியில் தன்னிறைவு
- தனம், தானிய கிஷான் யோஜனா (தன தான்ய கிருஷி) திட்டம் மாநில அரசின் பங்களிப்புடன் செயல்படுத்தப்படும். இந்த திட்டத்தில் உற்பத்தி குறைவாக உள்ள 100 மாவட்டங்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
- துவரை, உளுந்து, மசூர் பருப்புகளின் உற்பத்திற்கு முக்கியத்துவம். ஆறாண்டுகளுக்கு செயல்படுத்த உள்ளது.
“இந்திய அஞ்சல்துறை, மிகப்பெரிய அளவில் ” லாஜிஸ்டிக் மையமாக மாற்றப்படும்”. இந்திய அஞ்சல் துறை கிராமப்புற பொருளாதாரத்தை ஊக்குவிக்கும் உந்துசக்தியாக செயல்படும்.
மருத்துவ படிப்புக்கு கூடுதலாக 10,000 இடங்கள் உருவாக்கப்படும்.
உலக அளவில் பொம்மை தயாரிப்பு மையமாக இந்தியாவை மாற்ற நடவடிக்கை.
கப்பல், விமானப் போக்குவரத்துத் துறைகளுக்கு ஊக்கம்
பொருளாதாரத்தில் முதலீடு என்னும் 3வது எஞ்ஜினின் ஒரு பகுதியாக, பொது – தனியார் கூட்டாண்மைகள், மாநிலங்களுக்கு ஆதரவு உள்ளிட்ட பல்வேறு சீர்திருத்தங்கள.
அனைத்து நிதிசாரா துறைகளுக்கான விதிமுறைகள், சான்றிதழ்கள், உரிமங்கள், அனுமதிகளை ஆய்வு செய்வதற்காக ஒழுங்குமுறை சீர்திருத்தங்களுக்கான உயர்நிலைக் குழு அமைக்கப்பட உள்ளது.
அடுத்த ஐந்தாண்டுகள் ‘அனைவருக்கும் வளர்ச்சி’ என்பதை உணர்வதற்கான ஒரு தனித்துவமான வாய்ப்பு.
தொழில்துறை சரக்குகளுக்கான ஏழு சுங்க வரி விகிதங்களை நீக்குவதற்கு முன்மொழியப்பட்டுள்ளது.
நல்லாட்சி நிர்வாகத்தை உறுதி செய்ய முன்மொழியப்பட்ட நேரடி வரி சீர்திருத்தங்கள்.
வர்த்தகத்துக்கு உதவுதலை உறுதி செய்ய முன்னுரிமை: ஜிஎஸ்டி சட்டத்தில் மாற்றம் கொண்டுவர முடிவு.
முதலாவது முன்கூட்டிய மதிப்பீடுகளின்படி, 2025-ம் நிதியாண்டில் இந்தியாவின் உண்மையான மற்றும் பெயரளவிலான மொத்த உள்நாட்டு உற்பத்தி முறையே 6.4% மற்றும் 9.7% ஆக வளரும் அதிகரிக்கும் என எதிர்பார்ப்பு.
விவசாயம், பெண்கள், இளைஞர்களின் நலனிற்கும் பட்ஜெட்டில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.
மாநிலங்களுக்கு வட்டி இல்லா கடனாக 1.5 லட்சம் கோடி வழங்க இலக்கு.
மகளிர் சுய உதவி குழுவினருக்கு தனி கிரெடிட் கார்டு வழங்கப்படும்.
மானியத்துடன் கூடிய முத்ரா கடன் திட்டம் மருத்துவத்துறைக்கும் விரிவாக்கம் செய்யப்படும்.
இதையும் படிக்கலாமே
6th To 10th School Book முக்கிய வருடங்கள் |