Chemistry Questions and Answers for Competitive Exams

THITTAM AUTHOR

By THITTAM

Published on:

Join Telegram Channel Join WhatsApp Channel
Chemistry-Questions-and-Answers-for-Competitive-Exams

Chemistry Questions and Answers for Competitive Exams

            வேதியியல் வினா விடைகள்

1) கேதோடு பற்றிய பின்வரும் கூற்றுகளை கவனிக்கவும்.

ⅰ. கேதோடு கதிர்கள் எதிர் மின்துகள்கள் கொண்டவையாகும்.

ⅱ. கேதோடு கதிர்கள்  கால்வாய் கதிர்கள் என்றும் அழைக்கப்படுகின்றன.

ⅲ. கேதோடு கதிர்களின் வேகம் வீச்சு 0.3Cலிருந்து 0.98C ஆகும்.

மேற்கண்ட கூற்றுகளில் சரியானது எது?

A) ⅰ  மட்டும்

B) ⅰ மற்றும் ⅲ  மட்டும்

C) ⅰ மற்றும் ⅱ மட்டும்

D) மேற்கண்ட அனைத்தும்

Answer : A

2) ஜே.ஜே.தாம்சனின் அணு மாதிரிக் கொள்கை பற்றிய பின்வரும் கூற்றுகளை கவனிக்கவும்.

ⅰ. அணு மாதிரிக் கொள்கை அணுவின் நடுநிலைத் தன்மையை விளக்குகிறது.

ⅱ. அணு மாதிரிக் கொள்கை அணுவின் நிலைத்தன்மையை விளக்குகிறது.

ⅲ. அணு மாதிரிக் கொள்கை எர்ன்ஷாவின் தேற்றத்தை விளக்கவில்லை.

மேற்கண்ட கூற்றுகளில் சரியானது எது/எவை?

A) ⅰ மட்டும்

B) ⅱ மட்டும்

C) ⅲ  மட்டும்

D) ⅰ மற்றும் ⅲ மட்டும்

Answer : D

3) ஹைட்ரஜன் அணுவின் 5வது சுற்றுப்பாதையின் ஆரம் 13.25 A° எனில், அச்சுற்றுப்பாதையில் உள்ள எலக்ட்ரானின் அலைநீளத்தைக் கணக்கிடுக.

A) 15.5 A°

B) 2.6 A°

C) 2.5 A°

D) 16.6 A°

Answer : D

4)  பின்வரும் கூற்றுகளை கருத்தில் கொள்க.

ⅰ. அணுக்கருவுக்கு மிகவும் அருகில் அமைந்துள்ள சுற்றுப்பாதையின் ஆற்றல், சிறும மதிப்பைப் பெற்றுள்ளது.

ⅱ. ஹைட்ரஜனின் அடிநிலை ஆற்றல் மதிப்பு ( -13.6ev ) ஆகும்.

மேற்கூறியவற்றுள் சரியானது எது/எவை?

A  ⅰ மட்டும்

B) ⅱ  மட்டும்

C) இரண்டும்

D) இரண்டுமில்லை

Answer : C

5) கீழ்க்கண்ட எந்த ஹைட்ரஜன் நிறமாலை வரிசையை வெறும் கண்ணால் பார்க்க முடியும்?

A) லைமன் வரிசை

B) பாமர் வரிசை

C) பிராக்கெட் வரிசை

D) பாஷன் வரிசை

Answer : B

6) பின்வரும் கூற்றுகளை கருத்தில் கொள்க.

ⅰ. ஹைட்ரஜன் அணுவின் நிறமாலைக் கோடுகள் மின்சார மற்றும் காந்தப்புலத்தால் பாதிக்கப்படுகின்றன.

ⅱ. ஜிமன் விளைவு அணுக்களில் மின்சார புலம்  பயன்படுத்தப்படும்போது ஒவ்வொரு  நிறமாலை கோடும் பல கோடுகளாக பிரியும்.

மேற்கூறியவற்றுள் சரியானது எது/எவை?

A) ⅱ மட்டும்

B) ⅰ மட்டும்

C) இரண்டும்

D) இரண்டுமில்லை

Answer : B

7) பின்வரும் கூற்றுகளை கவனிக்கவும்.

கூற்று (A) : ஐசோடோப்புகள் ஒருமித்த வேதிப் பண்புகளைக் கொண்டிருக்கின்றன.

காரணம் (R) : எந்த ஒரு அணுவின் வேதியியல் பண்புகளும் எலக்ட்ரான்களால் மட்டுமே தீர்மானிக்கப்படுகின்றன.

A) (A) மற்றும் (R) இரண்டும் சரி மற்றும் (R) என்பது (A)-யின் சரியான விளக்கமாகும்.

B) (A) மற்றும் (R) இரண்டும் சரி ஆனால் (R) என்பது (A)-யின் சரியான விளக்கமல்ல.

C) (A) சரி ஆனால் (R) தவறு

D) (A) தவறு ஆனால் (R) சரி

Answer : A

8) ஐசோடோப்புகள் என்பது,

A) சமமான நிறை எண் ஆனால் வேறுபட்ட அணு எண்ணைக் கொண்டிருக்கும்.

B) சமமான புரோட்டான் எண் மற்றும் நியூட்ரான் எண்ணைக் கொண்டிருக்கும்.

C) சமமான புரோட்டான் எண் ஆனால் வேறுபட்ட நியூட்ரான் எண்ணைக் கொண்டிருக்கும்.

D) சமமான நியூட்ரான் எண் ஆனால் வேறுபட்ட புரோட்டான் எண்ணைக் கொண்டிருக்கும்.

Answer : C

9) பின்வரும் கூற்றுகளை கருத்தில் கொள்க.

ⅰ. வலிமையான அணுக்கரு விசையானது மிகவும் குறைவான வீச்சு கொண்டது.

ⅱ. புரோட்டான் – புரோட்டான் மற்றும் நியூட்ரான் – நியூட்ரான் ஆகியவற்றிற்கு இடையே வலிமையான அணுக்கரு விசையானது சமமாக செயல்படுகிறது.

மேற்கூறியவற்றுள் சரியானது எது/எவை?

A) ⅰ மட்டும்

B) ⅱ மட்டும்

C) இரண்டும்

D) இரண்டுமில்லை

Answer  : C

10) CH2F2 என்ற சேர்மத்திலுள்ள கார்பனின் ஆக்சிஜனேற்ற எண்ணைக் கண்டுபிடிக்கவும்?

A) +6

B) 0

C) +4

D) +2

Answer : B

11) எந்த வருடம் ஷ்ரோடிங்கருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது?

A) 1906

B) 1922

C) 1901

D) 1933

Answer : D

12) யுரேனியம் வழி தனிமங்களை கண்டுபிடித்தவர் யார் ?

A) கிளன் T. சீபர்க்

B) ஹம்பரி டேவி

C) லவாய்சியர்

D) ஷீல்

Answer  : A

13) பின்வரும் தனிமங்களுள் அதிக எலக்ட்ரான் கவர்தன்மை கொண்ட  தனிமம் எது?

A) குளோரின்

B) புளூரின்

C) ஆக்ஸிஜன்

D) சல்பர்

Answer : B

14) நீர் வாயு என்பது?

A) H2O(g)

B) CO + H2

C) CO + H2O

D) CO + N2

Answer  : B

15) எம்முறையில் உருகிய சோடியம் ஹைட்ராக்ஸைடு மின்னாற்பகுக்கப்பட்டு, சோடியம் ஆக  பிரித்தெடுக்கப்படுகிறது?

A) காஸ்ட்னர் முறை

B) சயனைடு முறை

C) டௌன் முறை

D) இவையனைத்தும்

Answer  : A

16) ஹால் ஹெரால்ட்  செயல்முறையின்படி பிரித்தெடுக்கப்படும் உலோகம் எது?

A) Al

B) Ni

C) Cu

D) Zn

Answer  : A

17) பின்வருவனவற்றுள் எது அதிகுளிர்நிலை சிகிச்சைக்கும், உயிரியல் பதப்படுத்தியாகவும் பயன்படுகிறது?

A) திரவ நைட்ரஜன்

B) திரவ ஆக்ஸிஜன்

C) திரவ ஹீலியம்

D) திரவ பியூட்டேன்

Answer  : A

18) கீழ்க்கண்டவற்றுள் எந்தச் சேர்மம் பூஞ்சைக் கொல்லி தயாரிக்கப் பயன்படுகிறது?

A) ஸ்லேக்டு லைம் மற்றும் நீல விட்ரியால்

B) ஸ்லேக்டு லைம் மற்றும் சுட்ட சுண்ணாம்பு

C) ஸ்லேக்டு லைம் மற்றும் பச்சை விட்ரியால்

D) ஸ்லேக்டு லைம் மற்றும் வெள்ளை விட்ரியால்

Answer  : A

19) பின்வரும் கூற்றுகளை கவனிக்கவும்.

ⅰ. பீனால்ப்தலீனை அம்மோனியம் ஹைட்ராக்சைடுடன் சேர்க்கும் பொழுது இளஞ்சிவப்பு  உருவாகிறது.

ⅱ. மெத்தில் ஆரஞ்சை காஸ்டிக் பொட்டாசுடன் சேர்க்கும் பொழுது மஞ்சள் நிறம்  உருவாகிறது.

ⅲ. ரொட்டிச்சோடா கரைசல் ஆனது சிவப்பு நிற லிட்மஸ் தாளை நீல நிறமாக மாற்றுகிறது.

மேற்கண்ட கூற்றுகளில் சரியானது எது/எவை?

A) ⅰ மற்றும் ⅱ

B) ⅱ மற்றும் ⅲ

C) மேற்கண்ட அனைத்தும்

D) இவற்றில் எதுவுமில்லை

Answer  : C

20) கீழ்க்கண்ட எந்தச் சேர்மம் மலேரிய நிவாரணியாக பயன்படுத்தப்படுகிறது?

A) குயினைன் மற்றும் பிரிமாகுயின்

B) குளோரோ குயின் மற்றும் பிரிமித்தமின்

C) சைக்ளோமேட் மற்றும் குயினைன்

D) A மற்றும் B ஆகிய இரண்டும்

Answer  : D

21) பின்வரும் கூற்றுகளை கருத்தில் கொள்க.

ⅰ. ஒரு பொருளில் காணும் தனிமத்தின் அக்ஸிஜனேற்ற எண் அதிகரித்தால் அது

ஆக்ஸிஜனேற்றியாகும்.

ⅱ. இரு பொருளில் காணும் தனிமத்தின் ஆக்ஸிஜனேற்ற எண் குறைந்தால் அது  ஆக்ஸிஜனேற்ற ஒடுக்கியாகும்.

மேற்கூறியவற்றுள் சரியானது எது/எவை?

A) ⅰ மட்டும்

B) ⅱ மட்டும்

C) இரண்டும்

D) இரண்டுமில்லை

Answer  : D

22) பின்வருவனவற்றுள் கார்பாக்ஸிலிக் தொகுதி இல்லாத அமிலத்தைத் தேர்ந்தெடு?

A) அசிட்டிக் அமிலம்

B) லாக்டிக் அமிலம்

C) பிக்ரிக் அமிலம்

D) டார்டாரிக் அமிலம்

Answer  : C

23) பின்வரும் கூற்றுகளை கருத்தில் கொள்க.

ⅰ. இரும்பு ஆணியை தாமிர சல்பேட் கரைசலில் வைக்கும் பொழுது அதன் நிறம் பச்சை  நிறத்திலிருந்து நீல நிறமாக மாறுகிறது.

ⅱ. தாமிரம் இரும்பை விட வினைபுரியும் திறன் அதிகம். இதனால் தாமிரம் இரும்பை இடப்பெயர்ச்சி செய்து நீல நிறமாக மாறுகின்றது.

மேற்கூறியவற்றுள் தவறானது எது/எவை?

A) ⅰ மட்டும்

B) ⅱ மட்டும்

C) இரண்டும்

D) இரண்டுமில்லை

Answer  : C

24) பாக்ஸைட்டின் பகுதிக்  கூறுகளைத் தேர்ந்தெடு.

A) Al2O3.nH2O

B) Al2O3

C) 3NaF.AIF3

D) K2O.Al2O3.6SiO2

Answer  : A

25)  வைரம் என்பது வேதியியல் படி,

A) உலோக கார்பனேட்டுகளின் கலவை

B) சுத்தமான கார்பன்

C) மணலின் சுத்தமான வடிவம்

D) கால்சியம் மற்றும் மக்னீசியத்தின் பாஸ்பேட்டுகளின் கலவை

Answer  : B

26) சிலிண்டரின் உள்ளே அடைக்கப்படும் வாயு என்ன?

A) திரவம்

B) வாயு

C) திண்மம்

D) கரைசல்

Answer  : A

27) “ஐஸோபார்” என்னும் தனிமங்கள்

A) சமநிறை எண், மாறுபட்ட அணு எண்

B) சம அணு எண், மாறுபட்ட நிறை எண்

C) வேறுபட்ட புரோட்டான்களின் எண்ணிக்கை

D) வேறுபட்ட நியூட்ரான்களின் எண்ணிக்கை

Answer  : A

28) எலும்பு மற்றும் பற்களில் காணப்படும் முக்கிய வேதிப்பொருள்?

A) சோடியம் குளோரைடு

B) சர்க்கரை

C) கால்சியம் பாஸ்பேட்

D) கால்சியம் சல்பேட்

Answer  : C

29) எலுமிச்சை மற்றும் ஆரஞ்சு பழங்களிலுள்ள அமிலம்

A) அசிட்டிக் அமிலம்

B) ஹைட்ரோகுளோரிக் அமிலம்

C) சிட்ரிக் அமிலம்

D) ஆக்ஸாலிக் அமிலம்

Answer  : C

30) சர்க்கரையின் நொதித்தல் வினையின் போது உருவாகும் முக்கிய சேர்மம்

A) மெத்தில் ஆல்கஹால்

B) எத்தில் ஆல்கஹால்

C) அசிட்டிக் அமிலம்

D) எத்திலீன்

Answer : B

31) ஹைட்ரஜனுடன் சேர்ந்து அதிகமான சேர்மங்களை உண்டாக்கும் தனிமம்?

A) ஆக்ஸிஜன்

B) சிலிக்கான்

C) கார்பன்

D) போரான்

Answer : C

32) உற்பத்தி வாயு என்பது எதன் கலவை?

A) Co + H2

B) Co + N2

C) Co2 +N2

D) Co2 + H2

Answer : B

33) வாணிப முறையில் பாக்ஸைட்டிலிருந்து அலுமினியத்தைப் பிரித்தெடுக்க பயன்படும் முறை?

A) பகுதி படிகமாக்கல்

B) பின்னக் காய்ச்சி வடித்தல்

C) மின்னாற்பகுப்பு

D) ஒடுக்குதல்

Answer  : C

34) பாலிவினைல் குளோரைடு (PVC) எம்முறையில் கிடைக்கிறது?

A)பிளத்தல்

B)பாலிமரைசேஷன் –  நிலைப்படுத்துதல்

C) குறைத்தல்

D) படியவைத்தல்

Answer  : B

35) இரும்புத்தாதுவிலிருந்து எந்த முறையின் மூலம் இரும்பு உருவாக்கப்படுகிறது?

A) குளோரினேற்றம்

B) ஒடுக்கவினை

C) பின்னக்காய்ச்சி வடித்தல்

D) மின்னாற்பகுப்பு

Answer  : B

36) எந்த வாயுவை அதிக வெப்பம், அதிக அழுத்தத்தில்  சூடுபடுத்தினால் அது மெழுகைப் போன்ற திண்மத்தைக் கொடுக்கும்?

A) குளோரின்

B) ஹைட்ரஜன்

C) அசிட்டிலீன்

D) எத்திலீன்

Answer  : D

37) வர்த்தகப் பயன்பாட்டில் அம்மோனியா தயாரிப்பு முக்கியம். ஏனெனில் அது இவற்றில் எதில் முக்கியமாகப் பயன்படுகிறது?

A) பல்படியாக்கல் மூலம் புரோட்டீன் உற்பத்தி

B) சோப்பு தயாரித்தல்

C) செயற்கை உணவு உற்பத்தி

D) உரங்கள் உற்பத்தி

Answer  : D

38) உருகிய நிலையிலும் எது மின்சாரத்தைக் கடத்தும்?

A) பாலித்தீன்

B) குளுக்கோஸ்

C) சாதாரண உப்பு

D) யூரியா

Answer  : C

39)  டோலமைட் என்பது எதன் தாது ?

A) Mg

B) Zn

C) Fe

D) Pb

Answer : A

40) ஆக்ஸிஜனேற்றம் என்பது,

A) எலக்ட்ரான் இழப்பு

B) ஹைட்ரஜன் பெறுவது

C) எலக்ட்ரான் பெறுவது

D) எலக்ட்ரான்களில் எம்மாற்றமுமில்லை

Answer  : A

41) ஹைட்ரஜனின் ஐசோடோப்புகளின் எண்ணிக்கை?

A) 1

B) 4

C) 3

D) 2

Answer  : C

42) ஆழ் கடலில் மூழ்கும் நீச்சல் வீரர் சுவாசித்தலுக்கு எக்கலவையைப் பயன்படுத்துகிறார்?

A) ஆக்ஸிஜன் மற்றும் கார்பன் டை ஆக்ஸைடு

B) ஆக்ஸிஜன் மற்றும் ஹைட்ரஜன்

C) ஆக்ஸிஜன் மற்றும் நைட்ரஜன்

D) ஆக்ஸிஜன் மற்றும் ஹீலியம்

Answer  : C

43) சிறுநீரகம் பழுதடைந்த நோயாளிகளுக்கு டயாலிசிஸ் செய்தல் என்பது எம்முறையில்?

A) பரவல்

B) கிரகித்துக் கொள்ளுதல்

C) சவ்வூடுபரவல்

D) எலக்ட்ரோபோரேசிஸ்

Answer  : C

44) புகைப்படத் தகடுகளில் வெள்ளி ஹேலைடுகள் பயன்படுத்தப்படுகின்றன. ஏனெனில்,

A) காற்றில் ஆக்ஸிஜனேற்றமடைவதால்

B) நிறமற்றது

C) ஹைப்போ கரைசலில் எளிதில் கரையக் கூடியது

D) ஒளியால் வேகமாக ஒடுக்கமடைவதால்

Answer  : D

45) சின்னபார் என்பது எதன் தாது?

A) தாமிரம்

B) இரும்பு

C) பாதரசம்

D) ஈயம்

Answer  : C

46) புகைப்படவியலில் பயன்படுத்தப்படும் ஹைப்போவில்  அடங்கியிருக்கும் வேதிப் பொருள்?

A) சில்வர் புரோமைடு

B) சோடியம் தயோ சல்பேட்

C) சோடியம் பாஸ்பேட்

D) சில்வர் நைட்ரேட்

Answer  : B

47) கரும்பு சர்க்கரையைக் குளுக்கோஸ் மற்றும் பிரக்டோசாக மாற்றச் செய்யும் நொதி?

A) லிப்பேஸ்

B) இன்வர்டேஸ்

C) சைமேஸ்

D) டையஸ்டேஸ்

Answer  : B

48) ஆஸ்பிரினின் வேதியியல் சேர்மப் பெயர்?

A)பீனால்

B) சாலிசிலிக் அமிலம்

C) அசிட்டைல் சாலிசிலிக் அமிலம்

D) பென்சோயிக் அமிலம்

Answer  : C

49) மயக்க மருந்தாக எந்த அமிலம் பயன்படுகிறது?

A) டார்டாரிக் அமிலம்

B) பென்சோயிக் அமிலம்

C) பார்பிடிரிக் அமிலம்

D) பியூடாநோயிக் அமிலம்

Answer  : C

THITTAM AUTHOR

THITTAM

Leave a Comment

error: Content is protected !!