தேர்தல் பத்திரங்கள் கடந்துவந்த பாதை
தேர்தல் பத்திர திட்டம் 2018ம் ஆண்டு ஜனவரி 2ம் தேதி ஒன்றிய பாஜக அரசால் அறிமுகப்படுத்தப்பட்டது.
தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுக்கு, தனிநபர்கள் அல்லது நிறுவனங்கள் தேர்தல்
செலவுகளுக்கான நன்கொடைகளை பத்திரங்கள் மூலம் வழங்கலாம்.
தகுதி
கடந்த பொதுத் தேர்தலில் மக்களவைக்கோ அல்லது சட்டமன்றத்திற்கோ மாநிலத்தின் மொத்த வாக்குகளில் ஒரு சதவீதத்திற்கும் குறையாத வாக்குகளை பெற்ற அரசியல் கட்சிகள் மட்டுமே இந்த பத்திரங்களை பெற தகுதியுடையவர்கள்.
பாரத் ஸ்டேட் வங்கியின் (SBI) அங்கீகரிக்கப்பட்ட 29 கிளைகளில் தேர்தல் பத்திரங்கள் விற்பனை செய்யப்படுகின்றன.
அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் வசூலிக்கும் தேர்தல் பத்திரங்களை, விநியோகிக்கப்பட்ட 15 நாட்களுக்குள் டெபாசிட் செய்து கட்சிகளின் வங்கி கணக்கில் வரவு வைத்து கொள்ள வேண்டும்.
15 நாட்களுக்கு பின் தேர்தல் பத்திரங்களை தாக்கல் செய்தால் பணம் வழங்கப்படாது.
தேர்தல் பத்திர திட்டத்தில் வெளிப்படைத்தன்மை இல்லை என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் பல்வேறு தன்னார்வ நிறுவனங்கள் சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த திட்டம் அரசியல் அமைப்புக்கு எதிராகவும், மக்களின் அடிப்படை உரிமைகளை மீறும் வகையில்
உள்ளதாகவும் கூறி இதனை அதிரடியாக ரத்து செய்துள்ளது உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திர சூட் தலைமையிலான உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு
தேர்தல் பத்திர முறைகள் ரத்து
தீர்ப்பின் முக்கிய அம்சங்கள்
தேர்தல் பத்திரங்கள், தகவல் அறியும் உரிமை சட்டம் மற்றும் அரசியல் சாசன பிரிவு 19 (1)(a) வை மீறும் வகையில் உள்ளது.
கறுப்புப் பணத்தை ஒழிப்பதற்கான ஒரே திட்டம் தேர்தல் பத்திரங்கள் திட்டம் அல்ல; வேறு மாற்று வழிகளும் உள்ளன.
பெரிய நிறுவனங்கள் அரசியல் கட்சிகளுக்கு அதிக அளவில் நிதியுதவி வழங்கிவிட்டு, அதற்கு கைம்மாறு எதிர்பார்க்க வாய்ப்புள்ளது.
தற்போதைய விதிமுறைகளின் கீழ் உள்ள தேர்தல் பத்திர முறை சட்ட விரோதமாக உள்ளது.
தேர்தல் பத்திரங்கள் திட்டம் அரசியலமைப்பிற்கு புறம்பானது.
வங்கிகள் உடனடியாக தேர்தல் பத்திரங்களை வழங்குவதை நிறுத்த வேண்டும்.
மார்ச் 6-ம் தேதிக்குள் தேர்தல் பத்திரம் மூலம் வழங்கப்பட்டுள்ள அனைத்து பங்களிப்புகளின் விவரங்களையும் தேர்தல் ஆணையத்திடம் SBI வழங்க வேண்டும்.
மார்ச் 13-ம் தேதிக்குள் அனைத்து விவரங்களையும் இணையத்தில் தேர்தல் ஆணையம் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
இதையும் படிக்கலாமே
தமிழகத்தின் சிறப்பு பெயர் பெற்ற இடங்களின் பட்டியல் |
தமிழ்நாட்டின் முதன்மைகள் பற்றிய குறிப்புகள் |