ஓரிதழ் தாமரை பயன்கள் பற்றி உங்களுக்கு தெரியுமா ?
ஓரிதழ் தாமரை ஆனது மனிதர்களுக்கு பல மருத்துவ நன்மைகளை வழங்குகிறது. ஆரோக்கியம் நிறைந்த ஓரிதழ் தாமரையை பற்றி இந்த பதிவில் பார்ப்போம். ஓரிதழ் தாமரையின் பூ, இலை, தண்டு, வேர், காய் உட்பட அனைத்திலும் மருத்துவ குணங்கள் மிகுந்து காணப்படுகின்றன.
ஓரிதழ் தாமரை வளரும் இடம்
ஓரிதழ் தாமரை ஒரு மூலிகை வகையாகும். இந்த மூலிகை செடியானது நீரோட்டம் அதிகம் உள்ள இடங்களிலும், வயல் சார்ந்த பகுதிகளிலும், தோட்டங்களிலும் வளரக்கூடியது.
ஓரிதழ் தாமரை பொடி பயன்படுத்தும் முறை
முதலில் நீங்கள் ஓரிதழ் தாமரையின் இலையை பறித்து நன்கு சுத்தம் செய்து, ஓரிதழ் தாமரையின் முழு சமூலத்தை நிழலில் உலர்த்தி அதனை பொடி செய்து இரவு தூங்கச்செல்வதற்குமுன் பாலில் அந்த ஓரிதழ் தாமரை பொடியை கலந்து சாப்பிட வேண்டும். இதைத்தொடர்ந்து ஒரு மண்டலம் சாப்பிட்டு வந்தால் உடனடி பலனை நீங்கள் எதிர்பார்க்கலாம்.
ஓரிதழ் தாமரை பயன்கள்
உடலின் வலிமை அதிகரிக்க
உடல் வலிமையை அதிகரிக்க ஓரிதழ் தாமரையின் சமூலத்தை கஷாயம் வைத்து சாப்பிட்டு வந்தால் உடலின் வலிமை மேம்படும்.
விஷக்காய்ச்சல் குணமாக
திடீரென ஏற்படும் விஷக்காய்ச்சல் குணமாக, இந்த ஓரிதழ் தாமரையின் சமூலத்தை கஷாயம் வைத்து குடித்து வந்தால் விஷக்காய்ச்சலுக்கு நல்ல பலன் கிடைக்கும். அதுமட்டுமில்லாமல் ஆஸ்துமா நோயால் பாதிக்கப்பட்டவர்களும் இந்த கஷாயத்தை குடித்து வந்தால் நல்ல பலனை பெறலாம்.
உடல் எடையை குறைக்க உதவும் ஓரிதழ் தாமரை
உடல் எடையை குறைக்க இந்த ஓரிதழ் தாமரையின் சமூலத்தை கஷாயம் வைத்து குடித்து வந்தால் உங்களது உடல் எடையில் ஏற்படும் மாற்றத்தினை நீங்கள் அறியலாம்.
இளமையாக இருக்க உதவும் ஓரிதழ் தாமரை
இன்றைய நவீன காலத்தில் உணவு முறையில் ஏற்படும் மாற்றம், சமூக சூழல், பொருளாதாரம் காரணமாக அதிக வேலைப்பளுவை சந்தித்து போதிய உறக்கமின்மையால் சில இளைஞர்கள் இளம் வயதிலேயே முதியவர்கள் போல காட்சியளிக்கிறார்கள். அவர்கள் இந்த ஆரோக்கியம் நிறைந்த ஓரிதழ் தாமரை மற்றும் கீழாநெல்லி உருண்டைகளை சாப்பிட்டு வர இளமையான தோற்றத்தினை பெறலாம்.
ஆண்மை அதிகரிக்க உதவும் ஓரிதழ் தாமரை
ஓரிதழ் தாமரை சூரணம் சாப்பிட்டுவர ஆண்மைக் குறைபாடு, குழந்தையின்மை பிரச்னை, தாம்பத்யத்தில் ஈடுபட இயலாமை போன்ற பலவிதமான பிரச்சனைகளுக்கு நல்லதொரு தீர்வு கிடைக்கும்.
ஓரிதழ் தாமரையில் உள்ள இலை, தண்டு, வேர், பூ , காய் என ஓரிதழ் தாமரையின் முழு சமூலத்தை அரைத்து சுண்டைக்காய் அளவு எடுத்து அதை பசும்பாலில் கலந்து காலையில் வெறும் வயிற்றில் மூன்று நாட்கள் சாப்பிட்டு வந்தால் ஆண்களுக்கு ஏற்படக்கூடிய வெள்ளை ஒழுக்கு பிரச்சனை, அடி வயிறு வலி பிரச்சனை மற்றும் ஆண்மைக் குறைபாடு, குழந்தையின்மை பிரச்னை, தாம்பத்யத்தில் ஈடுபட இயலாமை போன்ற அனைத்து பிரச்சினைகளும் குணமாகும்.
ஓரிதழ் தாமரையின் சமூலத்தை 21 நாட்கள் காலை வெறும் வயிற்றில் சாப்பிட்டு 50 மில்லி அளவு ஆட்டுப்பால் குடித்து வருவதன் மூலம் நீங்கள் இழந்த ஆண்மை சக்தியை திரும்பப் பெறலாம்.
இதையும் படிக்கலாமே,
GST Full Form in Tamil | ஜிஎஸ்டி பற்றிய முழுமையான விளக்கம் தெரிந்து கொள்ளுங்கள் |